இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் பெரிய அளவில் பலன் அளித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து இந்தியாவின் முடிவு மாறுமா அல்லது இதே நிலைப்பாடு தொடருமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது.
இந்தியா பல காலாண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறையாமல் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்திய அரசு தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை மாணவர்களுடன் கலந்துரையாடியபோது தெரிவித்தார். ஏற்கனவே சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக நான் நினைக்கிறேன். இதன் மூலம் ரஷ்யாவுடன் இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும் என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு மேற்கத்திய நாடுகளும், அதன் நட்பு நாடுகளும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அதிகப்படியான கட்டுப்பாடு தடையை விதித்தது. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மொத்தமாக முடங்கியது, ஆனால் இந்தியா, சர்வதேச நாடுகள் உடனான நட்புறவில் எவ்விதமான விரிசல் ஏற்படாமல் கச்சா எண்ணெய் வாங்கியது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40% பங்களிப்பை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ரஷ்யாதான் இந்தியாவின் முதன்மையான எண்ணெய் சப்ளையராக இருந்தது. ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடுத்த டாப் சப்ளையர்களாக இருந்தன.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில் உலக நாடுகள் ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து வாங்குவதால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சுமார் 30-40 டாலர்கள் வரை அதிகரிப்பதை இந்தியா தடுக்க உதவி செய்துள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்துப் பல விமர்சனங்கள் துவக்கத்தில் இருந்தாலும், சில மாதங்களுக்குப் பின்பு இந்தியாவின் செயல்பாடுகள் உலக நாடுகளுக்குச் சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகள் குறைந்தது. இதேவேலையில் வெனிசுலா, ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வராமல் இருப்பது குறித்துக் கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications