சவுதி, ஈராக் நாடுகளுக்கு ஷாக் கொடுத்த ரஷ்யா.. இதை எதிர்பார்க்கவில்லை..!

சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடுத்த பிறகு மேற்கத்திய நாடுகளில் ரஷ்யா மீது பல்வேறு வர்த்தக தடைகளை விதித்த நிலையில், தடை மீறி பல பிரிவுகளில் வர்த்தகம் செய்து வருமானம் ஈட்டி வருகிறது ரஷ்யா.

இதில் முக்கியமாக ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அதிகளவில் தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது. 2022 ஜூன் ஜூலை மாதத்தில் துவங்கி தொடர் ஏற்றுமதி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதிலும் குறிப்பாக இந்தியாவின் முக்கிய சப்ளையர் நாடுகளான ஈராக், சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளின் மொத்த அளவை விடவும் அதிக கச்சா எண்ணெய்யை ரஷ்யா பிப்ரவரி மாதம் சப்ளை செய்துள்ளது.

எண்ணெய் இறக்குமதி அதிகம்!

எண்ணெய் இறக்குமதி அதிகம்!

எனர்ஜி கார்கோ டிராக்கர் நிறுவனமான வோர்டெக்சா (Vortexa) தரவுகளின்படி ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பிப்ரவரியில் ஒரு நாளுக்கு 1.6 மில்லியன் பேரல்களாக உயர்ந்துள்ளது எனவும் பாரம்பரிய எண்ணெய் சப்ளையர்களான ஈராக் மற்றும் சவுதி அரேபியாவின் மொத்த இறக்குமதியை விட இது மிகவும் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மூன்றில் ஒரு பங்கு

மூன்றில் ஒரு பங்கு

ரஷ்யா தொடர்ந்து இந்தியாவுக்கு மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையராக இருப்பதாகவும், தொடர்ந்து ஐந்தாவது மாதமும், இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாக ரஷ்யா வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தள்ளுபடியில் இறக்குமதி!

தள்ளுபடியில் இறக்குமதி!

இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றனர். ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்னர் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கீடு 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால் போருக்குப் பின் 35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 1.62 மில்லியன் பேரல்

1.62 மில்லியன் பேரல்

தற்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா நாளொன்றுக்கு 1.62 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்த இறக்குமதியானது சவுதி மற்றும் அமெரிக்காவிடம் இருந்து பெறும் இறக்குமதியை விட அதிகமாக உள்ளது.

 அமெரிக்கா- சவூதியை பின்னுக்கு தள்ளிய ரஷ்யா!

அமெரிக்கா- சவூதியை பின்னுக்கு தள்ளிய ரஷ்யா!

தற்சமயம் இந்தியா, சவூதியிலிருந்து மாதந்தோறும் பெறும் விகிதத்திலிருந்து 16% வரையிலும், அமெரிக்காவிடமிருந்து 38 சதவீதமாகவும் இறக்குமதியை குறைத்துள்ளது.

வோர்டெக்சாவின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல தசாப்தங்களாக இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களாக இருக்கும் ஈராக் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்த எண்ணெயை விட ரஷ்யா இப்போது அதிகமாக இறக்குமதி செய்து வருவதாக கூறியுள்ளது.

பிப்ரவரி கச்சா எண்ணெய் இறக்குமதி

பிப்ரவரி கச்சா எண்ணெய் இறக்குமதி

இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியானது பிப்ரவரியில் ஒரு நாளுக்கு 9,39,921 பீப்பாய்கள் (barrels per day - bpd) எண்ணெய்யை ரஷ்யா வழங்கியுள்ளது. அதேசமயம் சவுதி 6,47,813 பிபிடி எண்ணெய்யை வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியாவுக்கு 4,04,570 பேரல், அமெரிக்கா 2,48,430 பேரலும் சப்ளை செய்து வருகிறது.

தள்ளுபடி விலை எத்தனை நாளுக்கு!

தள்ளுபடி விலை எத்தனை நாளுக்கு!

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை பெற்று வருவதாகவும், அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருவதாகவும் வோர்டெக்சாவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

60 டாலர்

60 டாலர்

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 60 டாலருக்கு குறைவாகவும், பொருளாதாரம் சாதகமாகவும், வர்த்தகத்தை ஆதரிக்கும் நிதி மற்றும் தளவாட சேவைகள் கிடைக்கும் வரையிலும் ரஷ்யாவிடமிருந்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் தங்களுடைய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+