டொனால்டு டிரம்ப் இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி தற்போது இரு நாடுகள் மத்தியில் மட்டுமல்லாமல் பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்காவின் மாபெரும் வர்த்தக போராக விளங்குகிறது. டிரம்ப் பிரேசில் மற்றும் இந்தியா மீது அதிகப்படியாக 50 சதவீத வரியை விதித்துள்ளது, சீனா உடன் இன்னும் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படாமல் உள்ளது. இதோடு இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை காரணம் காட்டி அமெரிக்கா கூடுதலாக வரியை விதித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக மத்திய அரசு சில வருடங்களுக்கு முன்பு போயிங் ராணுவ விமானங்களை வாங்குவதாக அறிவித்த நிலையில் இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் இதை பாதுகாப்பு துறை மறுத்துள்ளது.

இந்தியா அமெரிக்கா மத்தியில் 2021 ஆம் ஆண்டு 6 போயிங் P-8I கடல் கண்காணிப்பு விமானங்களை 2.42 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் இந்த விமானங்களின் விலை தற்போது 3.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதை முழுமையாக பாதுக்காப்பு துறையினர் மறுத்துள்ளனர். இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதை நிறுத்துவதற்கு எந்த திட்டமும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முன்பு மூன்று அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்காவிடமிருந்து புதிய ஆயுதங்கள் மற்றும் விமானங்களை வாங்குவதை இந்தியா நிறுத்தியதாகவும், இதற்கு டிரம்பின் உயர்ந்த வரிகள் காரணம் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், இதை மறுத்து, சிஎன்பிசி-டிவி18-க்கு பேசிய மூத்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், இந்த செய்தி "பொய் மற்றும் கட்டுக்கதையாகும்" என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications