இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் (நவம்பர் 5) தென்னாப்பிரிக்கா அணியை 83 ரன்களின் சுருட்டி இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது யாராலும் மறக்க முடியாது. இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி 27.1 ஓவரில் 83 ரன்களில் 10 விக்கெட்களையும் இழந்து பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பர்பாமென்ஸ்-ஐ பாராட்டதவர்களே இல்லை என்றால் மிகையில்லை. ஆனால் மறுமுனையில் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நம்பி தங்களுடைய பிராண்டின் வர்த்தகத்தைப் பல மடங்கு உயர்த்த வேண்டும் என்ற திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

தென்னாப்பிரிக்கா அணி-க்கு எதிரான இந்தியாவின் மாபெரும் வெற்றி மூலம் விளம்பரதாரர்கள் சுமார் 29 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பர வாய்ப்பை இழந்திருக்கக் கூடும் எனக் காஷிஷ் என்பவர் லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இது என்ன.. புதுக் கணக்கு எனப் பலருக்கும் கேள்வி எழுந்த நிலையில் இதற்குக் காஷிஷ் ஒரு கணக்கை வெளியிட்டு உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அதிகப்படியான பார்வையாளர்கள் உள்ளனர், இதை அடிப்படையாகக் கொண்டு தான் பல முன்னணி பிராண்டுகளும் விளம்பரதாரர்களும் தங்களுடைய பணத்தைக் குவித்து இப்போட்டியின் துவக்கம், இடையில், முடிவில் என விளம்பரத்தைக் காட்டி பிராண்டிங் செய்து வருகின்றனர்.
ஆனால் கிரிக்கெட் போட்டி விரைவில் முடிந்தால் என்ன ஆகும் என்பது பலரும் கணக்கிடுவது இல்லை. இப்படிப்பட்ட ஒரு மேட்ச் தான் இந்தியா - தென்னாப்பிரிக்கா மத்தியிலான போட்டி, சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிரான அனைத்து போட்டிகளும் வரைவாகத் தான் முடிகிறது.
இதனால் என்ன பிரச்சனை..? வாங்க ஒரு சின்னக் கணக்குப் போடலாம்.
50 ஓவருக்கு 200 நிமிடம். இதில் ஒரு ஓவருக்கு 4 நிமிடம். இதில் ஐசிசி விதிமுறைகளுக்கு இணங்க 3 முக்கியப் பிரேக்குகளுக்கு மத்தியில் தான் விளம்பரம் செய்ய முடியும்.
ஒவ்வொரு ஓவருக்கும் மத்தியிலான இடைவேளை - 30 நொடி - இதை 50 ஓவருக்குக் கணக்கிட்டால் 1500 நொடி.
இதேபோல் டிரிங்க்ஸ் பிரேக் 150 நொடி - அப்படியானால் 50 ஓவருக்குக் கணக்கிட்டால் 300 நொடி.
மேலும் விக்கெட் விழுந்தால் அடுத்தப் பேட்ஸ்மேன் வர 60 நொடி இடைவேளை, இதில் சராசரியாக 5 விக்கெட் எனக் கணக்கிட்டால் கூட மொத்தம் 300 நொடி.
அப்படியானால் 1500 + 300 + 300 = 2100 நொடி மொத்தம் 35 நிமிடம் விளம்பரம் செய்வதற்கான காலம் 50 ஓவரில் உள்ளது.
வருவாய் அளவீட்டை இதனுடன் ஒப்பிட்டுக் கணக்கிட்டால் 2023 உலகக் கோப்பை போட்டிகளின் விளம்பர விலை நிலையைப் பார்த்தால் 10 நொடிக்கு 30 லட்சம் ரூபாய் எனச் சந்தையில் கிடைக்கும் தரவுகள் கூறுகிறது.
இந்த நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மத்தியிலான ஆட்டத்தில் 27 ஓவரில் ஆட்டம் முடிந்த காரணத்தால் 23 ஓவரில் இருக்கும் விளம்பர ஒளிபரப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விளம்பரதாரர்கள் 50 ஓவர் மேட்சில் சுமார் 46 சதவீத விளம்பர வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
210 நொடியில் 46 சதவீதம் எனில் 966 நொடிக்கான விளம்பரம் செய்யும் வாய்ப்பு வீணாகியுள்ளது. இதை 10 நொடிக்கு 30 லட்சம் ரூபாய் என்ற விளம்பர கட்டணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 28.98 கோடி ரூபாய் மதிப்பிலான விளம்பர வருவாய் வீணாகியுள்ளது எனக் காஷிஷ் கணக்கிட்டு உள்ளார்.
இது விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்குத் தான் வருவாய் இழப்பு, இதனால் பிராண்டுகளுக்கு நிதி இழப்பு என்று அர்த்தமில்லை என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த விளம்பரங்கள் மூலம் பிராண்டுகளுக்குக் கிடைக்கும் வர்த்தகம் பாதிக்கப்படலாம்.
இந்தியாவின் வெற்றியில் இப்படியொரு சோக கதை.. ஆனாலும் கப்பு முக்கியம் பிகிலு..!!
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications