சர்வதேசச் சந்தைகளின் தாக்கத்தால் இந்திய பொருளாதாரம், வர்த்தகச் சந்தை அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரத்திற்குப் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
உண்மையில் இந்தியாவின் நிலைமை தான் என்ன..?
இந்தியா
இந்தியாவின் ஏற்றுமதி அளவீடுகள் வரலாற்று உச்சத்தில் உள்ளது, பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் இரட்டிப்பாகியுள்ளது, கடந்த சில தசாப்தங்களாகப் பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ள நடுத்தர மக்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர், சினிமா, கார்கள், ரியல் எஸ்டேட் மற்றும் விடுமுறை என மக்கள் அதிகளவில் செலவழித்து வருகின்றனர்.
வேகமான வளர்ச்சி
இந்த ஆண்டு எந்தவொரு பெரிய பொருளாதார நாடுகளிலும் இல்லாத வேகமான வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது. இவை அனைத்தும் உண்மை தான், ஆனால் இதன் பலன்கள் பல கோடி இந்தியர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
வேலைவாய்ப்பு சந்தை
இந்தியாவின் இந்த வளர்ச்சி வேலைவாய்ப்புச் சந்தையில் எதிரொலிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் பட்டம் பெற்று வரும் மாணவர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. பல லட்சம் பட்டதாரிகள் இன்னும் வைகப்படுத்தாத துறையில் தான் உள்ளனர்.
அதிகம் செலவு செய்யும் போக்கு
இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை தற்போது அதிகப்படியான செலவு செய்யும் மக்களின் பழக்கத்தின் வாயிலாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இந்த வர்த்தகத்தின் பலன்கள் நகரத்து மிடில் கிளாஸ் மக்களைத் தாண்டுவது இல்லை.
பொருளாதாரப் பிரிவுகள்
கொரோனா தொற்றுக்குப் பின்பு பொருளாதாரப் பிரிவுகள் மத்தியில் இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாகப் பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்திய பொருளாதாரம்
கடந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 8.7% வளர்ச்சியடைந்து 3.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று கடந்த மாத இறுதியில் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் உள்நாட்டு முதலீட்டுச் சந்தையில் மந்தநிலை, அரசு பணியமர்த்தலில் மந்த நிலை, வேலையின்மை பாதிப்புகளைச் சரி செய்ய மானிய விலையில் எரிபொருள், உணவு மற்றும் ஏழைகளுக்கு வீடுகள் ஆகியவற்றை அளித்து வருகிறது மத்திய அரசு.
வேலைவாய்ப்பின்மை
ஜூன் மாதம் 12ஆம் தேதி வரையில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவீதமாக உள்ளது. இது நகரபுறத்தில் 7.9 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 7.3 சதவீதமாகவும் உள்ளது.
மே மாதத்தை எடுத்துக்கொண்டால் அதிகப்படியான வேலைவாய்ப்பின்மை உடன் தவித்தது ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்கள் தான்.
மே மாத வேலைவாய்ப்பின்மை தரவுகள்
ஹரியானா - 24.6 சதவீதம்
ராஜஸ்தான் - 22.2 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 18.3 சதவீதம்
திரிபுரா - 17.4 சதவீதம்
டெல்லி - 13.6 சதவீதம்
கோவா - 13.4 சதவீதம்
பீகார் - 13.3 சதவீதம்
ஜார்கண்ட் - 13.1 சதவீதம்
ஹிமாச்சல பிரதேசம் - 9.6 சதவீதம்
தெலுங்கானா - 9.4 சதவீதம்
பஞ்சாப் - 9.2 சதவீதம்
அசாம் - 8.2 சதவீதம்
சிக்கிம் - 7.5 சதவீதம்
கேரளா - 5.8 சதவீதம்
மேற்கு வங்காளம் - 5.8 சதவீதம்
புதுச்சேரி - 5.6 சதவீதம்
ஆந்திரப் பிரதேசம் - 4.4 சதவீதம்
கர்நாடகா - 4.3 சதவீதம்
மகாராஷ்டிரா - 4.1 சதவீதம்
மேகாலயா - 4.1 சதவீதம்
தமிழ்நாடு - 3.1 சதவீதம்
உத்தரப்பிரதேசம் - 3.1 சதவீதம்
உத்தரகண்ட் - 2.9 சதவீதம்
ஒடிசா - 2.6 சதவீதம்
குஜராத் - 2.1 சதவீதம்
மத்தியப் பிரதேசம் - 1.6 சதவீதம்
சத்தீஸ்கர் - 0.7 சதவீதம்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications