இந்தியாவில் 2வது கொரோனா தொற்று அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. இதனால் பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது ஆனால் முதல் லாக்டவுன் போல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஜூன் காலாண்டில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் சரிந்தது. இந்நிலையில் 2021 ஜூன் காலாண்டில் -12 சதவீதமாக இருக்கும் என UBS கணித்துள்ளது.
இந்திய பொருளாதாரம்
2021ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத விதமாக -7.3 சதவீத சரிவைச் சந்தித்தது. இந்த மிகப்பெரிய சரிவுக்கு முக்கியக் காரணம் மத்திய அரசு 2.5 மாதங்களாக எவ்விதமான முன்னேற்பாடும் இல்லாமல், திட்டமிடாமல் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது தான்.
2020 கொகோனா முதல் அலை லாக்டவுன்
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் 2021ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான, ஜூன் காலாண்டில் -23.9 சதவீதமும், 2வது காலாண்டில் -17.5 சதவீதமும் சரிந்தது, 3வது காலாண்டில் 0.40 சதவீத வளர்ச்சியும், டிசம்பர் காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியும் கண்டது.
மீண்டும் லாக்டவுன்
4வது காலாண்டில் நிலையான வளர்ச்சி அடைந்து வந்த இந்தியப் பொருளாதாரம், 2வது கொரோனா அலைக்கு மத்திய மாநில அரசுகள் முழுமையாகத் தயாராகாமல் இருந்த காரணத்தால் தற்போது மீண்டும் மாநில வாரியாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு 2021 ஜூன் காலாண்டில் -12 சதவீத பொருளாதாரத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
V வடிவிலான வளர்ச்சி
இதன் மூலம் இந்தியாவின் V வடிவிலான வளர்ச்சிப் பாதை சிதைந்து உள்ளது. 2021 ஜூன் காலாண்டு முதல் நாடு முழுவதும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு வரும் காரணத்தால் நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தை வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications