இந்தியாவின் கல்விச் சூழல் தற்போது ஒரு திருப்புமுனையில் உள்ளது. கடந்த ஆண்டில், அரசு கல்விக்காக ரூ 1.28 லட்சம் கோடி ஒதுக்கியது. மொத்த சேர்க்கை விகிதம் 28.4% ஐ எட்டி, கல்விக்கான அணுகல் சீராக மேம்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அமலாக்கம், மாணவர்களுக்கு டிஜிட்டல் அணுகலுக்கு முன்னுரிமை, ஆசிரிய-நிறுவனத் திறன் மேம்பாடு, தொழில்துறை-கல்வி ஒத்துழைப்பு, AI யுகத்திற்கான எதிர்காலத் திறன்களை வளர்ப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
நாட்டின் 1.4 பில்லியன் மக்கள் தொகையில் சுமார் 50% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், இந்தியாவின் கல்வித் துறை ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்த இளம் தலைமுறை வளத்தைப் பயன்படுத்த, இத்துறையில் நிலையான, மூலோபாய முதலீடுகள் அத்தியாவசியம். மொத்த சேர்க்கை விகிதத்தை 2035 ஆம் ஆண்டுக்குள் 28.4% இலிருந்து 50% ஆக உயர்த்தும் இலக்கு, கல்விப் பரவலை அதிகரிக்கும் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.

கிராக் அகாடமியின் CEO மற்றும் நிறுவனர் நீரஜ் கன்சல், "இந்தியா போன்ற ஒரு நாட்டில், பட்டங்களுக்கும் வேலைவாய்ப்புத் திறன்களுக்கும் இடையே இடைவெளி இருக்கக்கூடாது. 2026 பட்ஜெட்டில் உயர்கல்வி உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி சூழல்கள், ஆசிரியர்களின் மேம்பாடு, தொழில்துறையுடன் இணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் ஆழமான முதலீடு தேவை. பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துதல், ஆய்வகங்களை மேம்படுத்துதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பது ஆகியவை அவசியம். மாணவர்கள் எதிர்காலத் திறன்களுடனும் உலகளாவிய போட்டித்தன்மையுடனும் பட்டம் பெறும் கற்றலின் மீது கவனம் செலுத்த வேண்டும்," என்றார்.
சிவ நாடார் பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்த்தி தவார், "தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) ஐ விரைந்து செயல்படுத்துவதே தொடர்ந்து முன்னேற வழிவகுக்கும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல், நிறுவனத் திறன் மேம்பாடு மற்றும் விளைவு சார்ந்த சீர்திருத்தங்கள் இதற்கு அவசியம். மேலும், நகர்ப்புற-கிராமப்புற டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க உலகளாவிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்-கல்வி ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சியில் தொடர்ச்சியான முதலீடு ஆகியவை தேவைப்படும். இவை இந்தியாவின் மனித மூலதனத்தை வலுப்படுத்தி, அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு உதவும், 'ஆத்மநிர்பர் பாரத்' இலக்குக்கும் பங்களிக்கும்," என்று தெரிவித்தார்.
இந்தியா ஸ்கில்ஸ் அறிக்கை 2026 படி, பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு 56.35% ஆக அதிகரித்திருந்தாலும், கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான இடைவெளி கடுமையாகவே உள்ளது. AI சிறப்பு மையங்களுக்கு ரூ500 கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், 2026 பட்ஜெட் 'கடைசி மைல் திறன் மேம்பாட்டை' (Last-Mile Skilling) ஊக்குவிக்க வேண்டும். கிக் பொருளாதாரத்தில் நுழையும் 16% தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் EdTech நிறுவனங்களுக்கு வரி சலுகைகள், பல திறன் அடிப்படையிலான படிப்புகளுக்கு கவனம் செலுத்துவது அவசியம்.
CIEL HR இன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதித்யா நாராயண் மிஸ்ரா, "AI மற்றும் ஆட்டோமேஷனின் விரைவான முன்னேற்றங்களால், 2030 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 70% திறன்கள் மாறும். தொழில்துறை தேவைக்கும், பணியாளர் தயார்நிலைக்கும் இடையிலான இடைவெளி ஒரு கட்டமைப்புச் சிக்கலாகவே உள்ளது. இது டிஜிட்டல் திறன்கள், பிரச்சனை தீர்க்கும் திறன், விமர்சன சிந்தனை, AI அமைப்புகளுடன் திறம்பட செயல்படும் திறன் ஆகியவற்றில் வெளிப்படுகிறது. திறன்கள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு வெறும் நோக்கத்துடன் இல்லாமல், செயல்முறைக்கு வர வேண்டும் என்கிறார்.இதற்கு தொழிற்பயிற்சிகள் மற்றும் நெகிழ்வான கற்றல் மாதிரிகள் ஆதரவு அளிக்கும், அவை பணியாளர்கள் தங்கள் வேலையை விடாமலேயே அடுத்த நிலை திறன் பெற உதவும்," என்று வலியுறுத்தினார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications