இந்தியாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது, லட்சக்கணக்கான மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரிசையில் நின்று அடுத்த 5 ஆண்டுக்கு இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறார்கள். மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், அவர்களின் விரல்களில் ஊதா நிற மை வைக்குப்படும்.
இது சாதாரண மையில்லை, இது சில்வர் நைட்ரேட் மை. இது விரலில் அழிக்க முடியாத தடையத்தை ஏற்படுத்த கூடியவை, இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை இந்த மை நீடிக்கும். இந்த மை அழிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதால் வாக்காளர் மோசடி மற்றும் போலி வாக்குகளை இதை தடுக்கிறது.

இந்த மை யார் தயாரிக்கார்கள் தெரியுமா..? 1937 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த மை மைசூரில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையை உருவாக்கப்படுகிறது. மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் இந்த தேர்தலுக்காக 2.7 மில்லியன் பாட்டில்கள் மை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
கர்நாடக அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் 1962 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையத்திற்காக மட்டுமே மை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மை தான் ஒருவர் வாக்களித்ததற்கான சான்றாக இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்படும் மை.
இந்த நிறுவனம் வழக்கமாக தனது வர்த்தகம், உற்பத்தியை செய்தாலும், தேர்தல் நடக்கும் காலத்தில் கூடுதல் பிசியாக இருக்கும். ஒவ்வொரு மாநில தேர்தலுக்கும் இந்த தொழிற்சாலையில் இருந்து மை டப்பாக்கள் செல்ல உள்ளது.
அதுவும் தற்போது பொது தேர்தல் என்பதால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலருக்கும் அதிகம் சம்பாதிதுள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த மை தயாரிக்கும் நிறுவனம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் நடக்கும் தேர்தல் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான தேர்தல் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
இந்த வருடத்திற்கான பொது தேர்தல் சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 14 பில்லியன் டாலக் செலவில் நடத்தப்படுகிறது என ஃபர்ஸ்ட் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த தேர்தலாக உள்ளது.


Click it and Unblock the Notifications