இந்தியா தனது பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தி வரும் வேளையில், தற்போது இந்தியா உலகளவில் முக்கிய ஆயுதம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
வெள்ளிக்கிழமை KPMG நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் ஐரோப்பாவுக்கான 3வது பெரிய ஆயுத சப்ளையராக இந்தியா உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் 2030-ஐ இலக்காக வைத்து ஆயுத பலத்தை உயர்த்த வேண்டும் என முடிவு செய்து இதற்காக ஐரோப்பிய கமிஷன் தலைவர் Ursula von der Leyen தலைமையில் 800 பில்லியன் யூரோ மதிப்பிலான ராணுவ கட்டமைப்பு மற்றும் திறன்களை மேம்படுத்தும் Rearm Europe திட்டத்தை உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவுக்கான ஆயுத ஏற்றுமதி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் உள்நாட்டு உற்பத்தி தளமும் திறனும் மேம்பட்டு வருகிறது.
மத்திய அரசு பாதுகாப்பு பிரிவுக்கான தொழிற்துறையை வெறுமென 16 பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்காமல் தனியார் நிறுவனம், MSME, ஸ்டார்ட்அப் உட்பட அனைத்து பிரிவுகளையும் இணைந்து உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி என்பது 2013-14ஆம் நிதியாண்டில் வெறும் 686 கோடி என்ற அளவில் இருந்து 13 வருடத்தில் 56.01 மடங்கு அதிகரித்து 38,424 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நிதியாண்டில் மட்டும் சுமார் 55 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதங்கள், ஏவுகணை, வெடிபொருட்கள் என 80-100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், அர்மெனியா உட்பட பல நாடுகள் அடக்கம்.
இந்தியா தற்போது தனது ப்ரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்காகத் தொடர்ந்து உலக நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது, இதனால் இனி ஒவ்வொரு வருடமும் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications