இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்து ஆகியிருக்கிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 27 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பாக கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை பல கட்டங்களை கடந்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் தலைவர் அண்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Mother of all deals என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் இந்தியர்களுக்கு 27 நாடுகளில் தடையற்ற வர்த்தகம் செய்வதற்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பல்வேறு பொருட்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி குறைந்து அவற்றின் விற்பனை விலை சரியும். தற்போது இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தின் மதிப்பு 180 பில்லியன் யூரோக்களாக இருக்கிறது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 2032 ஆம் ஆண்டுக்குள் இதன் மதிப்பு இரண்டு மடங்காக உயரும்.
இந்தியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரியை110 சதவீதத்திலிருந்து படிப்படியாக 10 சதவீதமாக குறைக்க உள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலைகள் கணிசமாக குறையும். அதாவது பிஎம்டபிள்யூ, ரெனால்ட், ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்களின் விலைகள் இனி கணிசமாக குறையப் போகின்றன. அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Wineகளுக்கான இறக்குமதி வரியை 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக இந்தியா குறைக்கிறது. இது படிப்படியாக 20 சதவீதம் என்ற அளவிற்கு குறைக்கப்படும்.

ஆலிவ் எண்ணெய்க்கான இறக்குமதி வரி 45 சதவீதத்தில் இருந்து படிப்படியாக 0 என்ற நிலைக்கு கொண்டு வரப்படும். இது தவிர பிரட் போன்றவற்றிற்கான இறக்குமதி வரி என்பது நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் சேவை சார்ந்த துறைகளில் கால் பதிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்திருக்கிறது. நிதி சார்ந்த தேவைகள் மற்றும் கடல் சார்ந்த போக்குவரத்து துறைகளில் இந்த நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளன.
இந்தியா தன்னுடைய கார்பன் வெளியிட்டு அளவை குறைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சார்பாக 500 மில்லியன் யூரோக்கள் நிதி உதவியாக வழங்கப்பட இருக்கிறது. அடுத்ததாக இந்த இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் இதனை எடுத்தது படிப்படியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார், மதுபான வகைகள் மட்டுமல்ல இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள், விமானங்கள், விண்கலன்கள், கண் கண்ணாடி பொருட்கள் , மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனங்கள், மருந்துகள் ஆகியவற்றின் இறக்குமதி வரியை இந்தியா வெகுவாக குறைக்க உள்ளது என்பதால் இந்திய சந்தையில் இவற்றின் விலை குறைய போகிறது.
பிராசஸ் செய்யப்பட்ட உணவுகள் குறிப்பாக பாஸ்தா, பிரெட், பிஸ்கட்டுகள், சாக்லெட்டுகளுக்கு தற்போது 50% வரி விதிக்கப்படும் நிலையில் இந்தியா அதனை பூஜ்ஜியமாக்க உள்ளது. எனவே இவற்றின் விலை குறைய போகிறது. பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ்கள், ஆல்கஹால் இல்லாத பானங்களின் வரியையும் இந்தியா பூஜ்ஜியமாக்கியுள்ளது. எனவே இவற்றின் விலையும் சரிய போகிறது.
அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ள நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 27 நாடுகளுக்கான சந்தை வாய்ப்பு இந்த ஒப்பந்தம் மூலம் கிடைத்துள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கும் உற்பத்தி துறைக்கும் மிகப்பெரிய ஊக்கம் ஆகும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications