டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றிய நாளில் இருந்து இந்தியா பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. முதலில் 25 சதவீத வரி, பின்னர் விசா கட்டுப்பாடு, ஐடி துறை வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகள், ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் அபராதமாக 25 சதவீத வரி. இப்படி இந்தியர்களுக்கும், இந்திய சந்தைக்கும் தொடர்ந்து நெருக்கடி வந்த வண்ணம் உள்ளது.
டிரம்ப்-ன் கெடுப்பிடியால் தற்போது இந்தியா ஈரான், வெனிசுலா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளதால் இந்தியாவுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வர்த்தக பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசு பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து வருகிறது. குறிப்பாக டிரம்ப் அதிபராக வந்த பின்பு ஓமான், நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் கடைசியாகவும், மிக முக்கியமானதாக இந்தியா FTA ஒப்பந்தம் கையெழுத்திட்டது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடன் தான், சுமார் 27 நாடுகள் கொண்ட இக்கூட்டமைப்புடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது மூலம் மிகப்பெரிய பலனை அடைய உள்ளது. இன்று பட்ஜெட் கூட்டத்தொடரிலும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஐரோப்பா உடனான FTA ஒப்பந்தம் குறித்து பேசினார்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் எந்த துறை அதிகம் பலன் அடையும், இந்த மாநிலங்கள் பலன் அடையும் என்ற பெரும் கேள்வி உருவாகியிருக்கிறது. இதற்கான பதிலை தேடும் பயணமாக இந்த செய்தி இருக்கும்.
இந்தியா இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தம் மூலம் (FTA) உலகின் 20 டிரில்லியன் டாலர் மதிப்புடைய ஐரோப்பிய சந்தையுடன் இணைத்துள்ளது. இந்த இணைப்பு இந்திய உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இதுநாள் வரையில் டாலரில் வருமானம் பார்த்து வந்த நிறுவனங்கள் இனி யூரோவில் வருமானம் பார்க்கப்போகிறது.
இதுமட்டும் அல்லாமல் இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும் உலகளாவிய விநியோக சங்கிலியில் பெரும் இணைப்பை உருவாக்க உள்ளது. பட்ஜெட் 2026க்கு முன் இந்த ஒப்பந்தத்தை விவாதிப்பது மிக அவசியம், ஏனெனில் இது நீண்டகால தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி இலக்குகள் கொண்டு இருப்பதால், இந்த பட்ஜெட்டில் உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அறிவிப்புகள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Engineering & Manufacturing: இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் இன்ஜினியரிங், கெமிக்கல் துறைகளுக்கு உலகின் 2 டிரில்லியன் டாலர் சந்தையுடன் நேரடியாக இணைத்துள்ளது. இதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா 300 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய உதவும்.
Chemicals & Petrochemicals: இதற்காக கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களில் 97.5% ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விலக்கு கிடைத்துள்ளது. இதனால் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐரோப்பிய சந்தை இந்தியாவுக்கு திறக்கப்படுகிறது. MSMEகளுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உயர்தர உற்பத்தி வாய்ப்புகள் உருவாகின்றன.
Textiles & Apparel: இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக டெக்ஸ்டைல்ஸ் மற்றும் தோல் துறைகள் மிகப் பெரிய பயனாளிகளாக உள்ளன. டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடைத் துறைக்கு 100% வரி விலக்கு கிடைக்கிறது. இதன் மூலம் ஐரோப்பாவின் 263 பில்லியன் டாலர் மதிப்பிலான டெக்ஸ்டைல் சந்தை இந்திய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு திறக்கப்படுகிறது.
Leather & Footwear: தோல் மற்றும் காலணி துறையில் இந்திய பொருட்களுக்கான வரி 17%லிருந்து 0%க்கு குறைகிறது. இதன் மூலம் ராணிப்பேட்டை, ஆக்ரா, கான்பூர் போன்ற நகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஐரோப்பிய சந்தையில் எளிதாக வர்த்தகம் செய்ய முடியும்.
Pharma & Med-Tech: மருந்து, மருத்துவ தொழில்நுட்பம் துறைகள் ஐரோப்பா போன்ற உயர்மதிப்பு கொண்ட சந்தைக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும். இந்த FTA ஒப்பந்தம் மூலம் மருந்துத் துறைக்கு 572 பில்லியன் டாலர் சந்தை திறக்கப்படுகிறது.
Gems & Jewellery: இதை தொடர்ந்து ரத்தினம் மற்றும் நகைக்கு 100% வரி விலக்கு கிடைக்கிறது. இதன் மூலம் 79 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரீமியம் சந்தையில் இந்திய நிறுவனங்கள் இறங்கும்.
Marine & Seafood: விவசாயம் மற்றும் கடல் உணவுத் துறைக்கு புதிய வாய்ப்புகள் பிறந்துள்ளது. இந்தியாவில் கடல் உணவு மற்றும் இறால் ஏற்றுமதிக்கு 53.6 பில்லியன் டாலர் சந்தை முழுமையாக திறக்கப்படுகிறது.
Agriculture: திராட்சை, காப்பி, தேயிலை, மசாலா பொருட்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது.
வடக்கு vs தெற்கு:
இந்த FTA ஒப்பந்தம் மூலம் எந்த பகுதிக்கு அதிக லாபம்..?
- மேற்கு இந்தியாவில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ரசாயனம், ரத்தினம், பொறியியல் துறைகளில் மூலம் லாபம் பெறுகிறது.
- தென் இந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு தொழில்நுட்பம், மருந்து, கடல் உணவு, ஜவுளி ஏற்றுமதியில் புதிய வாய்ப்புகள் திறந்துள்ளது.
- வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ரத்தினம், தோல், கைவினை பொருட்களுக்கு மூலம் புத்துயிர் பெறுகின்றன.
இந்த FTA வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல; இது இந்தியாவின் தொழில் மையங்களை உலக அளவில் விரிவாக்கும் பெரிய திட்டமாக உள்ளது. மேலும் பிராந்திய அளவில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு வாய்ப்புகள் சமமான முறையில் திறக்கப்பட்டு உள்ளது. ஆயினும் பட்ஜெட் 2026இல் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் கொள்கைகள் இடம்பெறால் மேலும் சில புதிய கதவுகள் திறக்கும்.
இறுதியாக இத்தகைய FTA ஒப்பந்தம் வேலைவாய்ப்பு சந்தைக்கு கொண்டாட்டம் போன்றது. சாமானிய மக்களுக்கு இது புதிய வர்த்தக வாய்ப்புகளையும், நாட்டின் பொருளாதார வலிமையையும் உறுதிப்படுத்தும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications