இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுமதியாளர்களுக்கு 27 நாடுகளுக்கான சந்தை கதவுகளை திறந்து வைத்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இனி குறைந்த வரிக்கு அல்லது பூஜ்ஜிய வரிக்கு ஐரோப்பிய சந்தையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடியும்.
இந்தியாவில் குறிப்பாக குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தோல் பொருள் உற்பத்தியாளர்கள் என ஏற்றுமதி துறை சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்களுக்கெல்லாம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நஷ்டத்திற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய சூழலுக்கு ஆளாகினர். அமெரிக்காவுக்கு மாற்றாக வேறு சந்தையை தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் மத்திய அரசு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. எனவே இந்த ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க சந்தை குறித்து இனி கவலை கொள்ளவே தேவையில்லை. ஏனெனில் இவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 27 நாடுகளின் சந்தை வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்டிருக்க கூடிய இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள். தோல் பொருள் உற்பத்தியாளர்கள் ,மருந்து உற்பத்தியாளர்கள், ஸ்டீல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய 99 சதவீத பொருட்களுக்கான வரி விதிப்பை அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் கணிசமான அளவு குறைக்க உள்ளன. ஜவுளி மற்றும் ஆடைகளுக்கு வரி இல்லை, அதே போல தோல் பொருட்களுக்கு அடுத்த ஏழு ஆண்டுகளில் படிப்படியாக வரி குறைக்கப்பட்டு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கிறது. கடல் சார்ந்த பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசாயனங்கள் மற்றும் ரப்பர் பொருட்களுக்கு படிப்படியாக அடுத்த ஏழு ஆண்டுகளில் பூஜ்ஜியமாக வரி மாற்றப்படுகிறது, நவரத்தினங்கள் , நகைகள் மற்றும் அடிப்படை உலோகங்களுக்கு வரி இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த துறை அனைத்துமே அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த துறை. இவர்களுக்கு தற்போது ஐரோப்பிய யூனியன் சந்தை கதவுகளை திறந்து இருக்கிறது.
தற்போது இந்தியாவை சேர்ந்த இந்த துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எளிதாக குறைந்த விலைக்கு தங்களுடைய பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் குறைந்த வரி காரணமாக ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனங்கள் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றாக இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கும். இது இந்தியாவை சேர்ந்த அதிக நபர்கள் வேலை செய்யக்கூடிய உற்பத்தி துறைகளுக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக அமைந்திருக்கிறது.
இவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்க சந்தையை சார்ந்திருந்த நிலை மாறி இருக்கிறது. இந்தியா அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 132 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில் இந்தியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையிலான வர்த்தக மதிப்பு 136 பில்லியன் ஆக இருக்கிறது. இது அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர போகிறது. அந்த வகையில் இந்த ஒப்பந்தத்தை Mother of all deals என அழைப்பதில் தவறே இல்லை.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications