இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் இத்துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் முக்கியமான விஷயம், செமிகண்டக்டர் சிப் தான். இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்க டாடா குழுமம் முதல் முருகப்பா குரூப் வரையில் பல நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தாலும்...
இத்துறைக்கு முக்கியத் தேவையாக இருக்கும் தொழில்நுட்ப கூட்டணிகளும், உதவிகளும் சரியாகக் கிடைப்பது இல்லை. செமிகண்டக்டர் சிப் தயாரிப்பாக வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணி மெகா திட்டத்தை அறிவித்த வேளையிலும் தொழில்நுட்ப உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் கூட்டணி முறிந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு முயற்சியின் கீழ் செமிகண்டக்டர் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, திறமை மேம்பாடு, கூட்டாண்மை மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பைப் பெறும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கூட்டம் நடக்க உள்ள நிலையில், இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை செமிகண்டக்டர் துறையில் பல்வேறு முக்கிய விஷயங்களுக்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான கூட்டத்தின் போது இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக நிர்வாகத் துணைத் தலைவர் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் மற்றும் துணைத் தலைவர் வேரா ஜூரோவா ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இந்தியா-ஐரோப்பிய மத்தியிலான ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் ஏப்ரல் 2022 துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஐரோப்பிய ஓன்றிய நாடுகளில் இருந்து கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications