அமெரிக்க அரசாங்கத்தின் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்து இயங்கக்கூடிய லட்சக்கணக்கான நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தி துறையில் இயங்கக்கூடிய நிறுவனங்களும் அதில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் . ஆனால் வர்த்தக ஒப்பந்தம் இப்போது வரும் அப்போது வரும் என ஓர் ஆண்டாக கூறிக் கொண்டு தான் இருக்கிறார்கள் தவிர இதுவரை உறுதியாக இந்த தேதியில் வர்த்தக ஒப்பந்தம் வரும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இது ஏற்றுமதி துறை சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்களுக்கும் அதில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு உற்பத்தியாளர்களும் அமெரிக்காவுக்கு மாற்று சந்தைகளை நாட வேண்டிய சூழலில் உள்ளனர். அவர்களுக்குத்தான் ஒரு நல்ல செய்தி வரப்போகிறது. கூடிய விரைவில் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருக்கிறது. 2022ஆம் ஆண்டு முதலே இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குடியரசு தினத்திற்கு அடுத்த நாள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்தியாவை சேர்ந்த உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை அது ஏற்படுத்தித் தரும். அமெரிக்காவால் இழந்த வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பெற முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களோடு வரும் 27ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார் அப்போது இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என சொல்லப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஏற்படுவதன் மூலம் இந்திய பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தைகளை அணுகும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் எந்த ஒரு வரியும் இல்லாமல் அல்லது மிக குறைந்தபட்ச வரியில் இந்திய பொருட்கள் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுக முடியும்.
அதே போல இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மிக எளிதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சென்று தொழில் தொடங்க முடியும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுடைய பொருட்களை எளிமையாக கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நாட்டு மக்களுக்கு பொருட்களின் விலை குறைவதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது. அதேவேளையில் போட்டி அதிகரிப்பதால் தரமான பொருட்களும் சந்தையில் கிடைக்கும்.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த கார்கள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும். இந்தியா தற்போது இறக்குமதி செய்யப்படக்கூடிய வாகனங்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்கிறது . பிஎம்டபிள்யூ, ரெனால்ட், ஃபோக்ஸ்வேகன் ஆகிய கார்களின் விலை அதிகமாக இருப்பதற்கு இறக்குமதி வரி அதிகமாக இருப்பது மிக முக்கிய காரணம்.

இந்த தடையற்ற வர்த்த ஒப்பந்தத்திற்கு பிறகு இவற்றுக்கான வரி என்பது குறைக்கப்படும். அப்படி என்றால் இந்தியாவில் பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட் ஆகிய நிறுவனங்களின் கார்களின் விலை குறையும். அடுத்ததாக ஐரோப்பிய ஒன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான வரி குறைக்கப்படும் என்பதால் இந்தியாவில் அவற்றின் விற்பனை விலை குறையும்.
இந்தியாவை சேர்ந்த ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தங்களுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு புதிய சந்தை வாய்ப்புகள் உண்டாகின்றன. நகை தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள், தோல் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், மின்னணு சாதனங்கள், மருந்து பொருட்கள் மற்றும் ரசாயனங்களை உற்பத்தி செய்யக்கூடிய நபர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தங்களுடைய பொருட்களை எளிமையாக கொண்டு சென்று விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உண்டாகிறது.
தற்போது இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 136.5 பில்லியன் டாலராக இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இருக்கின்றன.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications