இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு இருந்தாலும், அதிகப்படியான விலை இருக்கும் ஒரே காரணத்தாலும், எதிர்காலத்தில் இதன் ரீசேவ் வேல்யூ என்னவாக இருக்கும் என கணிக்க முடியாத காரணத்தாலும் எலக்ட்ரிக் காரிகளின் விற்பனை மாதத்திற்கு லட்சத்தை தாண்ட முடியாமல் உள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை நிலையமாக உயர்ந்து வரும் வேளையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஒரு முக்கியமான மாற்றத்தை கவனித்துள்ளனர். இது பலருக்கும் வியப்பாக இருந்தாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நான்கில் ஒரு எலக்ட்ரிக் காரை பெண்கள் வாங்குவதாக சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இது பெட்ரோல், டீசல் கார்களை வாங்கும் பெண்களை காட்டிலும் 2 மடங்கிற்கும் அதிகமானது என்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் கார்களை இயக்குவதை காட்டிலும், பராமரிப்பு பணிகளை ஒப்பிடுவதில் எலக்டிரிக் கார்கள் மிகவும் எளிதாக உள்ளது. இதைவிட முக்கியமாக வீட்டிலேயே சார்ஜ் செய்துக்கொள்ள முடியும், பெட்ரோல் - டீசல் செலவு இல்லை, பெரு நகரங்களில் இயக்க போதுமான அனைத்தும் பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் காரணத்தால் பெண்கள் அதிக ஆர்வத்துடன் எலக்ட்ரிக் கார்களை வாங்குகிறார்கள்.

இதேபோல் வேலைவாய்ப்பில் சேரும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு நிதி நிர்வாகம் குறித்த புரிதல் மிகவும் அதிகமாவே உள்ளதாலும், நிதி சுதந்திரம் அதிகமாகியிருப்பதாலும் தங்களுக்கு ஏற்றதையும், பிடித்ததையும் வாங்கும் உரிமையை பெற்றுள்ளனர்.
இதன் எதிரொலியாக தான் தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது, டாடா மோட்டார்ஸ்-ன் மொத்த எலக்ட்ரிக் வாகன விற்பனையில் 24 சதவீதம் பெண்களின் பங்கீடாகவும், எம்ஜி மோட்டார் இந்தியா-வில் 23-24 சதவீத பங்கீடாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications