இந்தியாவின் திட்டம் பலிக்குமா.. $70 கீழாக கச்சா எண்ணெய் கிடைக்குமா.. ரஷ்யாவின் முடிவு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுக்கு ரஷ்யா ஏற்கனவே சலுகை விலையில் கச்சா எண்ணெய் சப்ளை செய்வதாக அறிவித்திருந்த நிலையில், மீண்டும் தற்போது பேரலுக்கும் இன்னும் குறைக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுவும் பேரலுக்கு 70 டாலர்களுக்கும் கீழாக சப்ளை செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க! தங்கம் விலையை மீடியம் டெர்மில் நிர்ணயிக்கும் 5 முக்கிய காரணிகள்.. கவனமா இருங்க!

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவுக்கு சவால்கள்

ரஷ்யாவுக்கு சவால்கள்

இதற்கிடையில் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்துள்ளன. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ரஷ்யா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக ரஷ்யா மீதான ஸ்விப்ட் தடை, பெரியளவிலான பண பரிவர்த்தனையும் தடை பட்டுள்ளது. இதனையடுத்து எண்ணெய் வாங்கும் நாடுகளை ரூபிளில் கட்டணம் செலுத்த ரஷ்யா கோரிக்கை விடுத்து வருகின்றது.

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

ஆனால் இதை மறுத்து வரும் அண்டை நாடுகள், ரஷ்யாவுக்கு மாற்றினை தேடி வருவதாகவும் கூறி வருகின்றன. இதற்கிடையில் தற்போது வரையில் கூட கச்சா எண்ணெய் விலையானது 100 டாலர்களுக்கும் மேலாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக WTI கச்சா எண்ணெய் விலை 106 டாலர்கள் என்ற லெவலிலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் (2 மணி நிலவரப்படி) என்ற லெவலிலும் காணப்படுகின்றது.

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்

ரஷ்யா - உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியதில் இருந்தே கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இந்தியாவின் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் 40 மில்லியன் பேரல்களை வங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தரவுகள் கூறுகின்றது. ரஷ்யா 15 மில்லியன் பேரல்களை தள்ளுபடி விலையில் வழங்குவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவுக்கு எதிர்ப்பு

இந்தியாவுக்கு எதிர்ப்பு

இதற்கிடையில் 2021ம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதை விட, நடப்பு ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ப்ளூம் பெர்க் கணக்கீடு தெரிவித்துள்ளது. பல நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியா ஆதரவு காட்டி வருவைதையும் சுட்டிக் காட்டி பல எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

 ரஷ்யாவின் பங்கு குறைவு தான்

ரஷ்யாவின் பங்கு குறைவு தான்

எண்ணெய் விலையானது அதிகரித்து வரும் இந்த சூழலில், விலையானது குறைவது நல்ல விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியா அதன் மொத்த தேவையில் 85 சதவீதம் இறக்குமதி செய்தே வருகின்றது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வது குறைவு தான்.

எனினும் ரஷ்யாவின் இந்த சலுகைகளின் மத்தியில் இனி எதிர்காலத்தில் இறக்குமதிகள் அதிகரிக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

india expects russia to sell oil at less than 70 dollar/per barrel

india expects russia to sell oil at less than 70 dollar/per barrel/இந்தியாவின் திட்டம் பலிக்குமா.. $70 கீழாக கச்சா எண்ணெய் கிடைக்குமா.. ரஷ்யாவின் முடிவு?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X