தலைமுடி முதல் பாம்பு விஷம் வரை: இந்தியாவுல இப்படி கூட பிஸ்னஸ் நடக்குதா? நோட் பண்ணுங்கப்பா..

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மருந்து, உணவு பொருட்கள், மென்பொருட்கள், வாகனங்கள் என பலவற்றையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த பட்டியலில் நாம் கற்பனையே செய்யாத சில பொருட்களும் கூட இடம்பெற்று இந்திய பொருளாதாரத்திற்கே வலு சேர்க்கின்றன.

இந்தியாவின் ஏற்றுமதி தொடர்பாக வெளியான புள்ளி விவரங்கள் பல ஆச்சர்யமூட்டும் தகவல்களை நமக்கு தந்துள்ளது. 2026ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா 441.75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஸ்மார்ட் போன்கள், டீசல் உள்ளிட்டவை இந்த பட்டியலில் இருந்தாலும் பல வியக்கத்தக்க பொருட்களும் உள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தலைமுடி முதல் பாம்பு விஷம் வரை: இந்தியாவுல இப்படி கூட பிஸ்னஸ் நடக்குதா? நோட் பண்ணுங்கப்பா..

மனிதர்கள் தலைமுடி: இந்தியா கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 948 மில்லியன் டாலர்மதிப்புள்ள மனித தலைமுடியை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் பதப்படுத்தப்பட்ட முடி 651.72 மில்லியன் டாலருக்கும் பதப்படுத்தப்படாத முடி 286.99 மில்லியன் டாலருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் முடி, உள்நாட்டிலேயே தரம் பிரிக்கப்பட்டு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சலூன்களுக்கு Hair extensions-களாக அனுப்பப்படுகின்றன. அங்கே விக் தயாரிக்கவும் இந்தியர்கள் தலைமுடி பெரிய விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

பாம்பு விஷம்: இந்தியாவில் இருந்து பல மருந்துகள் குறிப்பாக ஜெனரிக் மருந்துகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவதை நாம் அறிவோம். அதில் பாம்பு விஷமும் முக்கிய இடத்தில் உள்ளது. இந்தியா கடந்த நிதியாண்டில் 5.72 மில்லியன் டாலர் மதிப்பிலான பாம்பு விஷத்தை ஏற்றுமதி செய்துள்ளது. இது பெரும்பாலும் பாம்பு கடி எதிர்ப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படுகிறது.

Also Read

மனித ரத்தம்: கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா 4.82 மில்லியன் டாலர் மதிப்பிலான மனித ரத்தத்தை ஏற்றுமதி செய்துள்ளது.

விளையாட்டுப் பொருட்கள்: விளையாட்டுக் கார்டுகள் (Playing cards) 18.05 மில்லியன் டாலர், செஸ் செட்கள் 3.99 மில்லியன் டாலர் மற்றும் கேரம் போர்டுகள் 3.09 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஆன்மீகப் பொருட்கள்: ஊதுபத்தி ஏற்றுமதி 151.16 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டி தந்துள்ளது. மேலும் சந்தன எண்ணெய், அத்தர் போன்ற நறுமண பொருட்களும் கணிசமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Recommended For You

ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இந்த தரவுகளின் படி இந்தியாவின் ஏற்றுமதி சந்தை எவ்வளவு விரிவானது என்பது நமக்கு தெரிய வருகிறது. இந்தியாவில் கிடைக்க இந்த பொருட்களுக்கு உலக சந்தையில் எவ்வளவு பெரிய வரவேற்பு உள்ளது என்பதை காட்டுகிறது. தொழில்நுட்பம் மட்டுமல்லாது, முடி முதல் பாம்பு விஷம் வரை பலதரப்பட்ட பொருட்கள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கின்றன.

எனவே ஏற்றுமதி சார்ந்த் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைஞர்கள் தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய இது போன்ற தொழில்களில் கவனம் செலுத்தலாம். அண்மையில் தான் மத்திய அரசு பிரிட்டன் உள்பட பல நாடுகள் உடனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. எனவே இனி வரும் நாட்களில் ஏற்றுமதி தொழில்கள் இன்னும் செழிக்க போகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+