இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலும் அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் பிளிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா வரிசையில் தற்போது ஆர்மீனியா-வும் இணைந்துள்ளது.
இந்தியா, ஆர்மீனியாவிற்கு உள்நாட்டிலேயே தயாரிக்குப்பட்ட ஏவுகணைகளை எதிர்த்து தாக்கும் anti-air system-ஐ ஏற்றுமதி செய்ய உள்ளது. இதனுடன் பல பேரல் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்ய உள்ளது.

சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) தயாரிக்கும் ஆகாஷ் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் டெலிவரி விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆகாஷ் அமைப்பு ஏற்கனவே இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது மற்றும் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் நிறுவனம், பீரங்கித் துப்பாக்கிகளுக்கான $155 மில்லியன் ஒப்பந்தத்தை அறிவித்தது, இதுவும் ஆர்மீனியா நாட்டிற்கான ஒப்பந்தமாகும்.
ஏப்ரல் மாதம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விமான எதிர்ப்பு அமைப்புக்கான ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த ஏற்றுமதி எந்த நாட்டுக்கு செல்கிறது என்பதை ரகசியமாக வைத்திருந்தது.
இதேபோல் மார்ச் மாதம், 8,160 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இரண்டு வான் பாதுகாப்பு அமைப்பின் இந்த ராணுவம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆயுத தயாரிப்பு அதிகரித்துள்ளதால் வெளிநாட்டில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
இதேபோல் இந்தியாவுக்கு ஏற்றுமதி பிரிவில் புதிய கதவு ஆயுத ஏற்றுமதி மூலம் திறக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications