இந்தியா சீனா இடையேயான வர்த்தக உறவானது நாளுக்கு நாள் சற்று கடினமாகிக் கொண்டே வருகிறது. ஒரு புறம் வரி அதிகரிப்பு, கட்டுப்பாடுகள் அதிகரிப்பு, இப்படி பலவகையிலும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா.
Recommended Video
இது இந்தியா சீனா எல்லை பிரச்சனையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு வகையில் தற்போது இருக்கும் நிலையில் இது இந்தியாவுக்கு பிரச்சனையே என்றாலும், இனி வரும் காலங்களில் ஆவது உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க இது வழி வகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
சீனாவுக்கு எதிராக நடவடிக்கை
உண்மையில் அரசின் இந்த நடவடிக்கையானது நல்ல விஷயமாகவே இருந்தாலும், சில பொருட்கள் இறக்குமதியில் முக்கால்வாசிக்கும் அதிகமாக நாம் சீனாவினைத் தான் நம்பியுள்ளோம். ஆக அப்படி இருக்கையில் சீனாவினை முழுவதுமாக ஒதுக்கியும் விட முடியாது. ஆரம்பத்தில் மக்களும் #boycotta china # boycottchinese goods என முழக்கமிட்டு வந்தனர். ஆனால் தற்போது அரசும் சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதுவரையில் என்ன நடவடிக்கை?
சீனா ஆப்கள் தடை தொடங்கி, ரயில்வே திட்டங்கள், நெடுஞ்சாலை துறையில் தடை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கிடையில் தற்போது கலர்டிவி இறக்குமதி கடும் கட்டுப்பாடு, தற்போது சோலார் பேனல்களுக்கு பாதுகாப்பு வரி நீட்டிப்பு என நடவடிக்கை தொடர்ந்து கொண்டே உள்ளது.
சீனாவிலிருந்து அதிகம் இறக்குமதி
இந்தியா சோலார் மற்றும் சோலார் உபகரணங்களில் 80 - 90 சதவீதம் இறக்குமதியானது, சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனினும் கொரோனாவினால் நலிவடைந்து போயுள்ள பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகவும் சோலார் மற்றும் சோலார் உபகரணங்கள் இறக்குமதிக்கு ஆகஸ்ட் முதல் 20 சதவீத வரி விதிக்கபோவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.
வரி அதிகரிப்பு நீட்டிப்பு
இந்த நிலையில் தற்போது சோலார் உபகரணங்களுக்கான SGD வரி ஜூலை 29ம் தேதியன்று காலாவதியாகிய நிலையில், இதுவே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறக்குமதிக்கு SGD 25% விதிக்கப்பட்டிருந்தது. இது ஜூலை 2019 முதல், ஜனவரி 2020 வரையில் 20% ஆகவும், இது பின்னர் 15% குறைக்கப்பட்டுள்ளது. ஆக இந்த விகிதமே இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் கட்டுப்பாடு
இது தவிர பிரிண்டிங் செய்யப்படும் தகடுகள் மற்றும் மூலப்பொருட்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமையன்று வெளியிடப்பட்ட வருவாய் துறை அறிவிப்பின் படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு பாதுகாப்பு வரி 14.9%மும், அடுத்த ஆறு மாதங்களுக்கு 14.5% ஆகவும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சீனா முக்கிய பங்கு
இந்த வரி விகிதமானது இந்தியாவில் சோலார் மின் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2022ம் ஆண்டுக்குள் சோலார் பவரை 100 GW அடையும் இலக்கில் சீனாவின் பங்கு மிக முக்கியமானது. ஏனெனில் 2020ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சோலார் உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1.2 பில்லியன் டாலர் சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் யார் இறக்குமதி?
இந்தியாவில் அதானி சோலார், விக்ரம் சோலார், வேர் எனர்ஜி மற்றும் டாடா பவர் சோலார் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்கின்றன. சொல்லப்போனால் இந்த இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை பொறுத்து தான் இவர்கள் எடுத்திருப்பார்கள். ஆக இவர்கள் பொருளாதார ரீதியாக மாறவும் வாய்ப்பில்லை என்கிறது ஒர் அறிக்கை.
இந்தியாவுக்கு முக்கியத்துவம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, இந்திய சீனா பிரச்சனைகளுக்கு முன்பே, கொரோனாவினால் சரிந்து வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த, இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். உலகத்திற்காக இந்தியா பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது அதனை செயல்படுத்தும் விதமாகத் தான் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது நல்ல விஷயம் தான்.
ஆரம்ப காலத்தில் இது கஷ்டமாக இருந்தாலும், வருங்காலத்தில் இது இந்தியாவுக்கு நல்ல விஷயமாகவே அமையும்..
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications