விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?

இந்தியாவின் பசுமை புரட்சியும், பல கோடி விவசாயிகளின் உழைப்பும் இன்று நம் தேசத்தை வெளிநாடுகளை நம்பாமல் உணவுத் தன்னிறைவுடன் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், இப்போது ஒரு புதிய ஆபத்து நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் அமெரிக்காவின் வணிக அழுத்தம். இது சாதாரண அழுத்தம் அல்ல. இது நம் விவசாயத்தின் நரம்புகளை நசுக்க வைக்கும் பேரழுத்தம். விவசாயம் நம் நெஞ்சில் பதிந்த பாரம்பரியம். அது தொழில் மட்டும் அல்ல. ஒரு தேசத்தின் சுவாசம். ஆனால் இன்று, அந்தச் சுவாசமே விலை பேசப்படும் சர்வதேச வர்த்தக பொருளாக மாறியிருப்பது தான் வேதனையான விஷயம்.

ஜூலை 9ஆம் தேதிக்குள் இந்தியா தனது பாதுகாக்கப்பட்ட விவசாய சந்தைகளை திறக்கவில்லை என்றால், 26% வரிகளை (Reciprocal) விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையாக தோன்றினாலும், இதன் பின்னணி நோக்கம் இந்தியாவின் உணவுப் பரிணாமத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி என்றே கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அழுத்தம், இந்தியாவின் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனித்து கட்டுப்படுத்தும் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும்.

விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..?  60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில், சிறு விவசாயிகள் குறைந்த அளவிலான நிலங்களை வைத்து தங்களின் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கா தங்களால் அதிகம் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் பால்வளப் பொருட்களை இந்திய சந்தையில் பெரிதும் விற்பனை செய்ய முயற்சித்து வருகிறது.

அமெரிக்காவின் விவசாய பொருட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்தால், நம் சிறு விவசாயிகளின் நிலைமை மோசமாகிவிடும். தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தையில் குறைவான விலைக்கு விற்க நேரிடும். உற்பத்தி நஷ்டமாகும். கடன், வறுமை ஏற்படும் என FLUIDIC FASHION நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷோபித் பூஷன் தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு இதுவரை அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு எதிராக நின்று நாட்டின் தன்னாட்சி மற்றும் விவசாயத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. ஆனால், இப்போது நிலைமை மோசமாகியுள்ளது. இந்தியாவின் விவசாய சந்தைக்கு, உணவு பாதுகாப்புக்கும் பெரிய அச்சுறுத்தலாக அமெரிக்கா வந்துள்ளது என டாக்டர் ஷோபித் பூஷன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இது வெறும் வணிகம் சார்ந்த விஷயம் அல்ல. இது இந்தியாவின் விவசாய துறையை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்.

அமெரிக்காவின் நோக்கம் மட்டும் நிறைவேறினால், இந்தியாவின் 60 கோடி விவசாயிகள் அமெரிக்காவின் பெரிய வேளாண்மை நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால், தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலை கூட இந்திய விவசாயிகளுக்கு வரும். இந்த நிலைமை விவசாய அமைப்பும், உணவு பாதுகாப்பும் பெரும் சவாலாகும்.

சிறு விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஆனால், இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமும் உள்ளது.

இந்தியா 75 ஆண்டுகளாக இதுவரை எந்த நாட்டுக்கும் தனது பால் துறையில் முதலீடு செய்யவும் வர்த்தகம் செய்யவும் ஒப்புதல் அளித்ததில்லை. இந்த துறையை மட்டும் திறந்துவிட்டால், ஊர் முழுக்க பசு மாடுகள் இருக்கும். ஆனால், பால் விற்பனை மையங்கள் அமெரிக்காவுக்கு சொந்தமானதாக இருக்கும்.

அமெரிக்கா 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலருக்கு உயர்த்துவோம் என கூறியுள்ளது. ஆனால், அமெரிக்காவின் உண்மையான நோக்கம், இந்தியாவின் உணவு வழங்கல் முறை மீது முழு கட்டுப்பாட்டு விதிப்பதாகும்.

பால் உற்பத்தி, தானியங்கள், மரபணு பயிர்கள் போன்றவை இந்தியாவின் உணவு பாதுகாப்பின் அடிப்படையாகும். இதில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்தால், இந்தியாவின் உணவு சுதந்திரமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், குறைந்த விலையில் வரும் அமெரிக்க விவசாயப் பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால், இந்திய விவசாய துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். இது, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை தாங்களாகவே உணவை உற்பத்தி செய்து, அமெரிக்கா வழங்கும் உணவுப் பொருட்களை அதிகம் சார்ந்து வாழ வேண்டிய நிலையை உருவாக்கும்.

ரெசிப்ரோக்கல் வரியில் இருந்து தப்பிக்க வாஷிங்டனில் அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க அதிகாரிகள் வெறும் வணிக ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, இந்தியா தனது விவசாய தன்னாட்சியை அமெரிக்க நிறுவனங்களின் லாபத்துக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஜூலை 9ஆம் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா ஒரு மிக முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா சொல்வதுபோல், நம் விவசாய சந்தையைத் திறந்து, வெளிநாட்டு பொருட்களுக்கு இடமளிக்க வேண்டுமா? இல்லை நம் விவசாயிகளின் வாழ்வையும், 1.4 பில்லியன் மக்களுக்கு தேவையான உணவையும் நாமே சுயமாகக் கட்டுப்படுத்திக் காக்க வேண்டுமா? என்பதே தற்போது இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த முடிவே, இந்தியா தன்னுடைய உணவுத் தன்னாட்சியை காக்குமா? என்பதை தீர்மானிக்கப் போகிறது.

இது வெறும் வரிவிதிப்பு பற்றிய பிரச்சனை மட்டும் அல்ல. வளர்ந்து வரும் நாடுகள், உலகளாவிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசைக்கும், சக்திவாய்ந்த நாடுகளின் பொருளாதார அழுத்தங்களுக்கும் எதிராக விவசாயிகளை எப்படி காப்பாற்றப்போகிறார்கள் என்பதை காட்டும் பெரும் சவாலாகும் என டாக்டர் ஷோபித் பூஷன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்று வியட்நாம் நாட்டுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்ததம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின் படி, வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதிக்கப்படும், இது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 46% வரியிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், அமெரிக்காவிலிருந்து வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது, இதோடு வியட்நாமின் சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு முழுமையாக திறந்துவிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் வியட்நாம் நாட்டில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய முடியும்.

மேலும், வியட்நாமில் இருந்து மற்ற நாடுகளின் பொருட்கள் (குறிப்பாக சீனாவிலிருந்து) அனுப்பப்படும் "டிரான்ஸ்ஷிப்பிங்" (transshipping) முறைக்கு 40% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+