ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது எல்லோருக்கும் தெதியும், ஆனால் இந்த தாக்குதல் மூலம் இந்தியாவுக்கு தான் அதிகப்படியான பாதிப்பு என்பது எத்தனை பேருக்கு தெரியுமா..?

ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் மூலம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு இது பெரிய சவாலாக மாறியுள்ளது. ஏனெனில், உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீர் வழி பாதையில் செல்லும் கப்பல்களை ஈரான் ராணுவமும், ஈரான் படைகளளும் தாக்கி வரும் காரணத்தால் இப்பாதையில் எண்ணெய் கப்பல் பயணிப்பதை நிறுத்தியுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

இந்த பாதையில் உலகின் 20 சதவீத எண்ணெய் செல்கிறது. இந்தியாவின் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட எண்ணெய் இறக்குமதி இந்த பாதை வழியாகத்தான் வருகிறது. இந்தியா ஆண்டுக்கு மொத்த தேவையில் சுமார் 85 சதவீத எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான மோதல் வெடித்தது மூலம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரெண்ட் கச்சா ஒரு பேரல் $80 அருகே சென்றுள்ளது. இது 7 மாத உச்சமாகும். ஹார்முஸ் நீர் வழி பாதை முடக்கத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலர் வரை உயரலாம் என்று சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இது இந்தியாவுக்கு பெரும் செலவை ஏற்படுத்தும். ஒவ்வொரு 1 டாலர் விலை உயர்வுக்கும் இந்தியாவின் ஆண்டு இறக்குமதி செலவு 2 பில்லியன் டாலர் செலவு அதிகரிக்கும். இப்படி உயரும் போது இந்தியா அதிக பணம் கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும், இது வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும். இதோடு இந்திய ரூபாய் மதிப்பும் குறையும், பணவீக்கமும் உயரும்.

இந்திய பங்குச் சந்தை ஏற்கனவே அழுத்தத்தில் உள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பெரும் சரிவை சந்தித்துள்ளன. ரூபாய் மதிப்பு 91-ஐ தாண்டியுள்ளது. JM Financial நிறுவனம் கூறுகையில், இப்போது இந்திய சந்தைக்கு எண்ணெய் விலை மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது.

எண்ணெய் விலை உயர்வால் பல துறைகள் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பெயிண்ட், டயர், விமான நிறுவனங்கள், ரசாயன தொழில்கள் ஆகியவை அதிக செலவை சந்திக்கும். இதனால் இத்துறை நிறுவனங்களின் லாபம் குறையும். ஆனால் ONGC, ஆயில் இந்தியா போன்ற எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் லாபம் பார்க்கலாம். HAL, BEL போன்ற பாதுகாப்பு நிறுவனங்களுக்கு மோதல் காரணமாக நல்ல வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில், ஈரான் மீதான தாக்குதல்கள் எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன. இது இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது. மோதல் நீடித்தால் பணவீக்கம், ரூபாய் பலவீனம், பங்குச் சந்தை சரிவு ஆகியவை அதிகரிக்கும் என்பதால் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான மோதல் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+