டெல்லி: நடப்பு நிதியாண்டில் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.
அது எந்தளவுக்கு எனில், இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் மிக மோசமான நான்காவது மந்தநிலையாகும். இது குறித்து கிரிசில் அறிக்கை வெளியிட்ட அறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் சுருங்கும் என்றும் என்று கணித்துள்ளது.

இதே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில்) 25 சதவீத சுருக்கத்தினை சந்திக்கும் என்றும் கணித்துள்ளது. அதோடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தினை நிரந்தரமாக இழக்கலாம் என்றும் கூறியுள்ளது.
எனவே தொற்று நோய்க்கு முன்னர் காணப்பட்ட வளர்ச்சி விகிதமானது, அடுத்த மூன்று காலாண்டுகளில் சாத்தியமில்லை. கடந்த 69 ஆண்டுகளில் இந்தியா மூன்று முறை மட்டுமே மந்த நிலையை கண்டிருக்கிறது. சில தரவுகளின் படி, 1958 மற்றும் 1966, 1980ம் நிதியாண்டுகளில் மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் விவசாயத்தினை தாக்கிய பருவ மழை, இது பொருளாதாரத்தில் கணிசமான வீழ்ச்சியினை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மந்த நிலையானது முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் விவசாயம் தற்போது குறைந்திருந்தாலும், லாக்டவுன் காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ளது. இதனால் முதல் காலாண்டில் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.
இந்த காலாண்டில் விவசாயம் சாரா பொருளாதாரம் மட்டும் அல்ல, சேவை துறையை சேர்ந்த கல்வி, பயணம், சுற்றுலா போன்ற சேவைகளும் வரவிருக்கும் காலாண்டுகளில் தொடர்ந்து பின்னடைவை சந்திக்க கூடும். இதனால் பணியிழப்பு மற்றும் வருமானங்கள் தொடர்ந்து சரியும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் கொரோனா வழக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் பொருளாதாரம் மிக நீண்ட காலத்திற்கு மோசமான நிலைக்கு தள்ளப்படலாம். ஏனெனில் இனியும் கட்டுப்பாடுகள் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. ஏனெனில் எதிர்பார்த்ததினை விட கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் செலவினங்களும் அதிகரிக்கும்.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதத்திலேயே தொழில் துறை உற்பத்தி 16 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. இது ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 60.3 சதவீதமாகவும் சரிந்தது. ஆக மொத்தத்தில் இது மிக மோசமான காலம் தான். இந்தியா மிக மோசமான நிலையைத் தான் எதிர்கொண்டு வருகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications