இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முக்கிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகத்தை பயமுறுத்தி வரும் முக்கியமான பிரச்சனை என்றால் அது குறைந்து வரும் இளம் தலைமுறையினரின் மக்கள் தொகை தான்.
இந்த நிலையில் இந்திய முதியோர் அறிக்கை 2023 என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (UNFPA) மற்றும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் அமைப்பு (ஐஐபிஎஸ்) உடன் இணைந்து செய்யப்பட்ட ஆய்வில் முக்கியமான விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன்படி 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 60 வயதிற்கும் அதிகமாக இருக்கும் முதியவர்களின் எண்ணிக்கை 149 மில்லியனாக இருந்தது, இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10.5 சதவீதமாகும்.
இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக வளர்ச்சி அடைந்து 20.8 சதவீதமாக உயர்ந்து 347 மில்லியனாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டு உள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் இந்த அளவு 36 சதவீதமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருவதாகவும், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் குழந்தைகளின் எண்ணிக்கையை விடவும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் இது 2046 ஆம் ஆண்டில் நடக்க வாய்ப்புள்ளதாக இந்திய முதியோர் அறிக்கை 2023 என்ற ரிப்போர்ட் கூறுகிறது.
இதைவிட முக்கியமாக இந்தியாவில் இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் பேர் மோசமான நிதிநிலையில் இருப்பதாகவும். இதன் மூலம் முதியவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சுகாதார வசதிகள் பெறுவதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் முதியவர்களின் வேலைவாய்ப்பு, பென்ஷன், வருமானம் குறித்து ஆய்வு செய்யும் போது சுமார் 18.7 சதவீதம் முதியோருக்கு எவ்விதமான வருமானமும் இல்லை. இந்த அளவு நாட்டின் 17 மாநிலத்தில் மிகவும் அதிகமாக உள்ளது உத்தராகண்ட்-ல் 19.8 சதவீதம் என்ற அளவில் துவங்கி லட்சத்தீவு-ல் 42.4 சதவீதம் என முடிகிறது இந்த பட்டியல்.
தற்போதைய நிலவரப்படி உலகிலேயே அதிகப்படியான இளைஞர்கள் கொண்ட நாடாக உள்ளது இந்தியா. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கு கீழ் உள்ளனர், மேலும் முதியோர் மக்கள் தொகை அளவு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. உதாரணமாக இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அதிக முதியோர்கள் எண்ணிக்கை கொண்டு உள்ளது.
இந்திய நிறுவனங்கள் CSR பிரிவின் கீழ் முதியோர் சேவைக்காக 2014 முதல் 2021 வரையிலான காலத்தில் சுமார் 1,259.6 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இது முந்தைய 7 ஆண்டு காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 182 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications