ரஷ்ய கச்சா எண்ணெய்-க்கு வந்தது புது பிரச்சனை.. புடின் - மோடி எப்படி சமாளிக்க போறாங்க..?!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நீண்ட காலமாக மாறாமல் இருப்பது சாமானிய மக்களின் பர்ஸ்-ஐ பதம் பார்த்து வரும் வேளையில், இந்தியாவுக்கும் பெரும் சாவல் காத்திருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய கச்சா எண்ணெய் அளவு மிகவும் குறைவு, இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா - இந்தியா மத்தியிலான தொலைவும், கடுமையான வர்த்தக பாதையும் தான்.

ஆனால் போருக்கு பின் ரஷ்யா தன் நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்றும் நோக்கியில் சர்வதேச சந்தை விலைக்கு கச்சா எண்ணெய் அளிப்பது மட்டும் அல்லாமல் எண்ணெய் போக்குவரத்துக்குமான இன்சூரன்ஸ் செலவுகளையும் ரஷ்யா ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்கு சப்ளை செய்து வருகிறது. இதனால் போருக்கு முன்பு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 2 சதவீதமாக இருந்த ரஷ்ய பங்கு மே மாதம் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய்-க்கு வந்தது புது பிரச்சனை.. புடின் - மோடி எப்படி சமாளிக்க போறாங்க..?!

சரி இதில் என்ன பிரச்சனை..?: இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக எவ்விதமான தங்குதடையுமின்றி பல்வேறு ஒப்பந்தம் கீழ் நிலையாக கச்சா எண்ணெய் சப்ளை செய்து வந்தது சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள்.

ஆனால் ரஷ்யா கொடுத்த அதிரடி தள்ளுபடி வாயிலாக இந்தியா அதிகளவிலான எண்ணெய்-ஐ வாங்கி குவித்து வருகிறது. கடந்த 10 மாதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி.

ஜூன் மாதம் ஒரு நாளுக்கு இந்தியா சுமார் 2.2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யா உட்பட உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது என KPLER நிறுவனத்தின் தலைமை கச்சா எண்ணெய் ஆய்வாளர் விக்டர் காடோனா தெரிவித்துள்ளார். மே மாதம் 46 சதவீதமெனில் ஜூன் மாதம் 47- 48 சதவீதம் எட்டியிருக்க கூடும், இந்த நிலையில் இந்தியா நிர்ணயம் செய்துள்ள லிமிட்-ஐ மீறி தொடர்ந்து அதிக கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவிடம் இருந்து வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய்-க்கு வந்தது புது பிரச்சனை.. புடின் - மோடி எப்படி சமாளிக்க போறாங்க..?!

இந்தியா வெளிநாட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் காரணத்தால் அனைத்து முக்கிய சப்ளையர்களுடன் நல்ல உறவை மேம்படுத்த வேண்டும், இது கட்டாயம் கூட. இதனால் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 50 சதவீதத்திற்கு மேல் வாங்காது என பேசப்பட்டு வந்த நிலையில், இந்த அளவீட்டை நெருங்கியுள்ளது, இதனால் 50 சதவீதம் லிமிட்-ஐ தாண்டி வாங்குமா என்ற கேள்விக்கு உடனடியாக மத்திய அரசு பதில்-ஐ தேட வேண்டும்.

இல்லையெனில் மொத்தமாக அனைத்து நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய்-ஐ வாங்கி இதை சரி செய்யலாம், ஆனால் இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்புக்கான கட்டமைப்பு அதன் உச்சக்கட்ட அளவீட்டை எட்டியுள்ளது. இதனால் இரண்டு பக்கமும் மாடிக்கொண்டு உள்ளது. இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறது புடின் - மோடி தலைமையிலான அரசுகள்..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+