உலகப் பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுடன் நேருக்குநேர் மோதும் சீனாவுக்கு ஒரு துறையில் பெரும் சவாலாக இருக்கிறது இந்தியா என்றால் மிகையில்லை.
ஆம் இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத் தூண் ஆக ஐடி துறை விளங்குகிறது.
இந்த ஐடி துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்த அளவிற்குச் சீன உயரவில்லை என்றும், ஆனால் விரைவில் இந்தியாவின் இடத்தைச் சீனா பிடிக்கும் என்றும் சீன ஐடி துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சீனா
சீனாவின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் வேளையில் ஐடி சேவை துறையில் சீனாவை விடவும் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருப்பது வியக்க வைக்கும் விஷயமாக உள்ளது.
ஐடி சேவை சந்தை
சர்வதேச ஐடி சேவை சந்தையில் சீனா-வை ஒப்பிடும் போது இந்தியா எட்ட முடியாத உயர்வில் உள்ளது. ஆனால் சமீப காலமாகச் சீனாவும் இந்தியாவுக்கு இணையாக ஈகாமர்ஸ், அட்டானமஸ் டிரைவிங், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேவை ஆகிய துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
MIKE LIU கருத்து
The Rise of Indian IT என்ற புத்தகத்தை எழுதிய MIKE LIU என்பவர் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தை வைத்துள்ளது, அதிலும் குறிப்பாக ஐடி அவுட்சோர்சிங் துறையில் ஒட்டுமொத்த ஆசியாவில் இந்தியா தான் முதன்மை நாடாக உள்ளது.
சீனா ஐடி சேவை
இதேவேளையில் சீனா ஐடி சேவை மற்றும் டெக் துறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் பெரும் பகுதி வருமானம் உள்நாட்டில் இருந்து மட்டுமே வருபவை. சீன நிறுவனங்களின் மொத்த வருவாயில் சுமார் 95 சதவீதம் உள்நாட்டுச் சந்தையில் இருந்து வருபவை என்பதால் இந்தியாவில் இத்துறையில் யாரும் எட்ட முடியாத அளவிற்கு உள்ளது என மார்க் லேயு தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ்
இதேவேளையில் சீன நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் இந்திய நிறுவனங்கள் உடன் போட்டிப்போட முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் The Rise of Indian IT என்ற புத்தகத்தை எழுதிய மார்க் லேயு இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ல் பல ஆண்டுக் காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகம்
பல தசாப்தங்களாக இந்திய மற்றும் சீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கும் The Rise of Indian IT புத்தகம் இப்போது சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது.
797.26 பில்லியன் டாலர்
சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT) வெளியிட்டுள்ள தரவுகள் படி, சீனாவின் மென்பொருள் வணிகத்தின் வருவாய் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 5.456 டிரில்லியன் யுவான் அளவை (797.26 பில்லியன் டாலர்) எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜிடிபி
இரு நாடுகளிலும் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறைகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. சீனப் பொருளாதாரத்தின் அளவைக் பார்க்கும் போது சீனாவின் தகவல் தொழில்நுட்ப வருவாய் மிக அதிகமாக உள்ளது.
ஒரே ஒரு பிரச்சனை
ஆனால் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் உலகச் சந்தைகளை ஆளும்போது, சீன நிறுவனங்கள் தொழில்நுட்ப துறையில் உள்நாட்டில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருவது சீனாவின் தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்



Click it and Unblock the Notifications