கிருஷ்ணகிரி-யில் வருகிறது இந்தியாவின் முதல் ஜிகாபேக்டரி.. தமிழ்நாடுன்னா சும்மாவா..! #OLA

இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம் இனி உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் தான் உள்ளது என்பதால் அனைத்து தரப்பினரும் இதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், இந்தியாவின் முதல் ஜிகாபேக்டரி தமிழ்நாட்டில் அதுவும் நம்ம கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது.

கிருஷ்ணகிரியில் உற்பத்தி தளம், பெங்களூரில் R&D தளம் என தனது கட்டமைப்பை நாளுக்கு நாள் விரிவாக்கம் செய்தும், மேம்படுத்தியும் வரும் ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்சாலை அடுத்த வருடம் முதல் செயல்பட துவங்கும் எனவும், இதுதான் இந்தியாவின் முதல் ஜிகாபேக்டரி ஆக இருக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைவர் மற்றும் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி-யில் வருகிறது இந்தியாவின் முதல் ஜிகாபேக்டரி.. தமிழ்நாடுன்னா சும்மாவா..! #OLA

இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, இந்தியாவிலேயே பேட்டரி தயாரிக்கப்பட உள்ளது. இதன் வாயிலாக ஓலா-வின் மேக் இன் இந்தியா திட்டத்தில் முக்கியக்கட்டத்தை அடைய உள்ளது. மேலும் இதன் வாயிலாக வாகனங்களின் உற்பத்தி செலவுகளை பெரிய அளவில் குறைக்க முடியும் எனவும் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அமைய உள்ள எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் ஜிகாபேக்டரி முதல் கட்டமாக 5 Gwh சக்தி கொண்டதாக இருக்கும், முழுமையாக கட்டி முடிந்து முழுமையான செயல்பாட்டை துவங்கிய பின்பு 100 Gwh சக்திக்கொண்டதாக இருக்கும். மேலும் இந்த பேட்டரி ஜிகாபேக்டரி உலகிலேயே மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தற்போது தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உற்பத்தி செலவில் பேட்டரி மட்டுமே 3ல் ஒரு பங்கு அல்லது 40 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளதாக ஓலா சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். கடந்த 2.5 வருட திட்டத்தில் இந்த பேட்டரி ஜிகாபேக்டரி உருவாக உள்ளது.

ஜிகாபேக்டரி என்ற சொல்-க்கு முழுமையான பொருள் பலருக்கும் தெரியாது, பொதுவாக அனைவரும் கூறுவது பெரிய தொழிற்சாலை தான் ஜிகாபேக்டரி என நினைக்கின்றனர். இது ஒரு 25 சதவீதம் சரியாக இருந்தாலும் முழுமையான பொருள் ஒரு பெரிய தொழிற்சாலையில் electrification மற்றும் decarbonization இணைந்து செயல்படும் பட்சத்தில் இது ஜிகாபேக்டரி ஆக கருதப்படுகிறது.

இதேபோல் இது எலக்ட்ரிக் வாகனம், கிளீன் டெக் ப்ராடெக்ட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பெரும்பாலும் ஜிகாபேக்டரி என்ற பெயர் வழங்கப்படுகிறது. முதன் முதலில் இந்த ஜிகாபேக்டரி என்ற பெயர் எலான் மஸ்க் பயன்படுத்தினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+