சர்வதேச பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் அடுத்த 15 ஆண்டுகளில் உலகிலேயே சக்தி வாய்ந்த பொருளாதாரமாக எந்த நாட்டின் பொருளாதாரம் இருக்கும் என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
உலக பொருளாதார லீக் டேபிள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அட்டவணையில் ஆசிய நாடுகள் உலக பொருளாதாரத்தில் முன்னணி இடத்தை பெறும் என தெரிவித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் , ஜிடிபியையும் மதிப்பீடு செய்து உலக பொருளாதார லீக் அட்டவணை அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தற்போது சர்வதேச ஜிடிபி 100 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் நிலையில் 2039 ஆம் ஆண்டில் அது 221 ட்ரில்லியன் டாலர்களாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் வலுவான வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 5 ட்ரில்லியன் டாலர்கள் என்ற மைல்கல்லை எட்டி நான்காவது இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2029 ஆம் ஆண்டின் இந்திய பொருளாதாரம் ஜெர்மனி பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி உலகின் சக்தி வாய்ந்த மூன்றாவது பொருளாதாரம் என்ற பெருமையை பெறும். 2039 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 12.8 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரம் ஆக உயர்ந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2036 ஆம் ஆண்டிலேயே இந்திய பொருளாதாரம் 10 ட்ரில்லியன் டாலர்கள் என்ற மதிப்பை எட்டிவிடும் என இந்த அறிக்கை கூறுகிறது. 2039 ஆம் ஆண்டிலும் உலக பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக அமெரிக்கா தான் இருக்க போகிறது.
2039 ஆம் ஆண்டில் அமெரிக்கா பொருளாதாரம் 53.45 ட்ரில்லியன் டாலர்களாக வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடான சீனா தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2039 ஆம் ஆண்டில் சீனா 44.76 ட்ரில்லியன் டாலர்களோடு இரண்டாவது இடத்தை பிடிக்கும் என சொல்லப்படுகிறது.
ஜெர்மனி 2039 ஆம் ஆண்டில் 7.48 ட்ரில்லியன் டாலர்களோடு நான்காவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். ஜப்பான் 2039 ஆம் ஆண்டில் 6.32 ட்ரில்லியன் டாலர்களோடு சக்தி வாய்ந்த ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரிட்டன் பின்னுக்கு தள்ளப்பட்டு ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது. பிரான்ஸ் ஏழாவது இடத்திலும், பிரேசில் எட்டாவது இடத்திலும், கனடா ஒன்பதாவது இடத்திலும், இந்தோனேசியா பத்தாவது இடத்திலும் இருக்கின்றன.
அதேபோல வங்கதேசம், பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் சக்தி வாய்ந்த பொருளாதார முதல் முப்பது பொருளாதாரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. சவுதி அரேபியா 2039 ஆம் ஆண்டில் 2.48 ட்ரில்லியன் டாலர்களோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார லீக் அட்டவணையில் இத்தாலி, தென் கொரியா,
ரஷ்யா ,ஆஸ்திரேலியா ,மெக்சிகோ , ஸ்பெயின், துருக்கி, நெதர்லாந்து, போலந்து, ஸ்விட்சர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, எகிப்து, இஸ்ரேல், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் இடம் பிடித்திருக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications