இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, அரசின் நிதி நிலை தொடர்ந்து 2 வாரங்களாக சரிந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு டிசம்பர் 23 வரையிலான வாரத்தில் 691 மில்லியன் டாலர் குறைந்து 562.808 பில்லியன் டாலராக உள்ளது.
கடந்த வாரம் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 571 மில்லியன் டாலர் குறைந்து 563.5 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 5 வாரங்களாக அதிகரித்து வந்த அந்நிய செலாவணி கையிருப்பு அளவுகள் தடைபெற்றது.
அன்னிய செலாவணி கையிருப்பு
2021 அக்டோபரில் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவு 645 பில்லியன் டாலர்களை எட்டியது. கொரோனாவுக்கு அதிக வளர்ச்சி வாய்ப்புகள் கொண்ட நாடாக இந்தியா உயர்ந்த நிலையில் அதிகப்படியான முதலீடுகள் இந்திய சந்தையில் குவிந்தது.
ரஷ்யா - உக்ரைன் போர்
ஆனால் 2022 பிப்ரவரி மாதத்திற்கு பின்பு ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு உலகளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள், வர்த்தக பாதிப்புகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் பணவீக்கம் அதிகரித்தது. இதன் வாயிலாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த துவங்கியது.
அன்னிய முதலீடு வெளியேற்ற
இதற்கு ஏற்றார் போல் இந்தியாவிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டாலும் அன்னிய முதலீட்டு வெளியேற்றத்தை தடுக்க முடியவில்லை. இதனால் ஓவ்வொரு முறை அமெரிக்க பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் போதும் இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகளின் வெளியேற்றம் மிகவும் அதிகமாக இருந்தது.
பணவீக்கம்
2022 ஆம் ஆண்டில் வல்லரசு நாடான அமெரிக்கா அந்நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கத் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தைப் பெரிய அளவில் அதிகரித்தது. இதன் மூலம் உலகளவில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் அமெரிக்கப் பத்திர சந்தையில் குவிந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு
இதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10.14% வீழ்ச்சி அடைந்துள்ளது. இதோடு ஆசியாவிலேயே மிகவும் மோசமாகச் செயல்படும் நாணயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது இந்திய ரூபாய். 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக அதிகப்படியான அளவு வருடாந்திர சரிவை பதிவு செய்துள்ளது.
வெளிநாட்டு நாணய சொத்துக்கள்
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராந்திர புள்ளி விவர அறிக்கையின் படி, டிசம்பர் 23 வரையிலான வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (FCA) 1.134 பில்லியன் டாலர் குறைந்து 498.49 பில்லியன் டாலராக உள்ளது.
சர்வதேச நாணயங்கள்
டாலர் அடிப்படையில் வெளிநாட்டு நாணய சொத்துக்கள் கணக்கிடப்பட்டாலும், அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ள யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற பிற நாணயங்களும் அடக்கும். இதன் மதிப்பின் சரிவு காரணமாகவே வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (FCA) 1.134 பில்லியன் டாலர் குறைந்து 498.49 பில்லியன் டாலராக உள்ளது.
தங்கம் கையிருப்பு
இதோடு தங்கம் கையிருப்பு 390 மில்லியன் டாலர் அதிகரித்து 40.969 பில்லியன் டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் கீழ் (SDR) 8 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 18.19 பில்லியன் டாலர்களாக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications