ரிசர்வ் வங்கி ஜூலை 21 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 12.74 பில்லியன் டாலர் அதிகரித்து 609.02 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த உள்ளதால் விரைவில் வட்டி உயர்வுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளது. இதேவேளையில் இங்கிலாந்து மத்திய வங்கி (BoE) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவையும் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகின்றன.

இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகியவை தனது பணவீக்க இலக்கான 2% அடைய திட்டமிட்டு உள்ளது. இதனால் பல சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் தற்போது பத்திர சந்தைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இன்று இந்திய பங்குச்சந்தையில் அதிகப்படியாக சரிவை சந்தித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 887.64 புள்ளிகள் சரிந்து 66,684.26 புள்ளிகளை அடைந்துள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 234.15 புள்ளிகள் சரிந்து 19,745.00 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த பெரும் சரிவுக்கு அன்னிய முதலீடுகள் வெளியேறியது முக்கிய காரணமாகும்.

ஜூலை 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு609.02 பில்லியன் டாலராக உயர்ந்த நிலையில் ஜூலை 7ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வெறும் 1.229 பில்லியன் டாலர் உயர்ந்து மொத்தம் கையிருப்பு 596.280 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 அக்டோபர் மாதம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 645 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது முக்கியமான விஷயம். இதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தை சூழ்நிலை காரணமாக தொடர்ந்து சரிந்து வந்தது, ஆனால் கடந்த சில வாரத்தில் இந்திய சந்தையின் சூழ்நிலை சிறப்பாக இருந்த காரணத்தால் அன்னிய முதலீடுகள் குவிந்தது.


Click it and Unblock the Notifications