இந்திய பொருளாதாரம் திணறல்.. 2 வருட சரிவில் ஜிடிபி.. பரபர டேட்டா வெளியானது..!

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (Q2FY25) வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. இதுநாள் வரையில் தொடர்ந்து சந்தை கணிப்புக்கு அதிகமான வளர்ச்சி அளவீட்டை பதிவு செய்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 2 வருட சரிவை பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் 5.4% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் பதிவான 6.7% வளர்ச்சியிலிருந்தும், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் பதிவான 8.1% வளர்ச்சியிலிருந்தும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். இந்த சரிவு நாட்டின் முதலீட்டு சந்தையில் கட்டாயம் எதிரொலிக்கும்.

இந்திய பொருளாதாரம் திணறல்.. 2 வருட சரிவில் ஜிடிபி.. பரபர டேட்டா வெளியானது..!


தொடர்ந்து 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியில் இருந்த இந்திய பொருளாதாரம், இக்காலாண்டில் 5.8 சதவீதமாக குறைய முக்கிய காரணமாக இருந்தது உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளில் பலவீனமான செயல்திறன் மற்றும் நகர்ப்புற நுகர்வு குறைந்து போனதால், மந்தமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிராமப்புறத்தில் மக்கள் அதிகமாக செலவு செய்ய துவங்கியிருக்கும் வேளையில் நாட்டின் தேவை மீண்டு வருவதற்கு இடையே, உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு, அதிக கடன் வட்டி விகிதங்கள் மற்றும் பலவீனமான சம்பள வளர்ச்சி ஆகியவை நகர்ப்புற நுகர்வோரை பாதித்துள்ளதன் விளைவாகவே தற்போது நாட்டின் ஜிடிபி 2 வருட சரிவை பதிவு செய்துள்ளது.

விவசாயத் துறை சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது. கடந்த காலாண்டில் 1.7% லிருந்து 3.5% ஆக வளர்ச்சி அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 14.3% லிருந்து வெறும் 2.2% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேபோல சுரங்கத் துறையும் கடந்த காலாண்டுகளில் வலுவான வளர்ச்சியை கண்ட பின்னர், இப்போது -0.1% வீழ்ச்சியடைந்துள்ளது.

கட்டுமானத்துறை இரண்டாவது காலாண்டில் 7.7% வளர்ச்சியைக் கண்டது, இது முந்தைய காலாண்டின் 10.5% மற்றும் கடந்த ஆண்டின் 13.6% ஐ விட குறைவானது. சேவைத் துறை இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட மெதுவாக 7.1% வளர்ச்சியைக் கண்டது. முந்தைய காலாண்டில் 7.2% மற்றும் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 6% வளர்ச்சியைக் கண்டது.

மேலும் நுகர்வு தேவையை அளவிடும் தனியார் இறுதி நுகர்வு செலவு, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 6% அதிகரித்து ரூ.24.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 7.4% மற்றும் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2.6% வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நுகர்வு செலவில் கிராமபுரத்தில் இருந்து அதிகப்படியான பங்கீட்டை கொண்டுள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயல்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் காலாண்டில் உற்பத்தி மற்றும் சுரங்கத்துறைகளில் "மந்தமான வளர்ச்சி" இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 6.2% வளர்ச்சி இருந்ததாக தெரிவித்துள்ளது.

"2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 'உற்பத்தி' (2.2%) மற்றும் 'சுரங்கம் மற்றும் குவாரி' (-0.1%) துறைகளில் மந்தமான வளர்ச்சி இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) இல் உண்மையான GVA 6.2% வளர்ச்சியைக் கண்டுள்ளது" என்று MoSPI அறிக்கை தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+