இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் 6.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் 4 காலாண்டுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம்.
மத்திய அரசு இன்று நாட்டின் ஜிடிபி குறித்து வெளியிட்ட அறிக்கையில்
2022ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.1 சதவீதமாக வளர்ச்சி கண்ட நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

2023 ஆம் நிதியாண்டில் இந்திய காலாண்டு அடிப்படையில் முதல் காலாண்டில் 13.1 சதவிகிதமும், 2வது காலாண்டில் 6.2 சதவிகிதமும், 3வது காலாண்டில் 4.5 சதவிகிதமும், 4வது காலாண்டில் 6.1 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
Gross Value Added (GVA) மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் நிதியாண்டில் இந்திய உற்பத்தித் துறை 1.3 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது, கடந்த ஆண்டு நாட்டின் உற்பத்தி துறை 11.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது. இதேபோல் விவசாயம், காடு மற்றும் மீன் பிட துறை 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, கடந்த ஆண்டில் இத்துறை 3.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதை தொடர்ந்து வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை 2022 ஆம் நிசியாண்டில் 13.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 14 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி 2023 ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் உண்மையான GDP வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. 2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) 7.6 சதவிகிதத்துடன் இந்த ஆண்டின் மொத்த GDP வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications