கடந்த சில வாரங்களாக, பல பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த ஜிடிபி தரவுகளை இன்று, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
இந்த ஏப்ரல் 2020 - ஜுன் 2020 காலாண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 23.9 சதவிகிதம் சரிந்து இருப்பதாக மத்திய அரசு சொல்லி இருக்கிறது.

இதுவரை இந்தியப் பொருளாதாரம், காணாத மிகப் பெரிய ஜிடிபி சரிவு இது. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு அறிவித்த லாக் டவுன்கள் தான் காரணம்.
கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் முதல் காலாண்டில் (ஜூன் 2019) இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 5.2 % வளர்ச்சி கண்டு இருந்தது.
கடந்த மார்ச் 2020 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 3.1 % வளர்ச்சி கண்டு இருந்தது.
கடந்த மொத்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.2 % வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஜூன் 2020 காலாண்டில் 23.9 சதவிகிதம் என கொஞ்சம் பலத்த சரிவைக் கண்டிருக்கிறது ஜிடிபி.
கடந்த மார்ச் 2019 காலாண்டில் இருந்தே இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து இருக்கிறது.
- மார்ச் 2019 5.7 %
- ஜூன் 2019 5.2 %
- செப்டம்பர் 2019 4.4 %
- டிசம்பர் 2019 4.1 %
- மார்ச் 2020 3.1 %
- ஜூன் 2020 -23.9 %
இப்போது இந்த ஜூன் 2020 காலாண்டில் மொத்தமாக 23.9 % சரிவைக் கண்டு இருக்கிறது.இந்திய பொருளாதாரம் அதிகம் சரிந்துவிடாமல் இருக்க, மத்திய அரசு ஆத்ம நிர்பார் திட்டத்தை அறிவித்தார்கள்.
அதே போல மத்திய ரிசர்வ் வங்கி, மார்ச் 2020-ல் இருந்து இதுவரை 1.15 சதவிகிதம் தங்களின் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தார்கள். இருப்பினும் இந்தியாவின் ஜிடிபி ஜூன் 2020 காலாண்டில் 23.9 % என்கிற வரலாரு காணாத சரிவைக் கண்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications