இந்தியப் பொருளாதாரம் கொரோனா பாதிப்பாலும், லாக்டவுன் அறிவிப்பாலும் இந்த வருடம் உலகின் பல முன்னணி நாடுகளை விடவும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவில் இருந்து மீண்டு வர மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிகள் இணைந்து அறிவித்த பல்வேறு ஊக்கத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு அடையவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியா பொருளாதாரம் எப்படி இருக்கும், எந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் லாக்டவுன் தளர்த்தப்பட்டுப் பல்வேறு பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தளங்கள் திறக்கப்பட்டாலும், போதுமான வேலைவாய்ப்புகளும், மக்கள் கையில் மிகவும் குறைந்த அளவிலான நிதி மட்டுமே இருக்கும் காரணத்தால் வர்த்தகச் சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லை.
இதனால் இந்தப் பொருளாதாரமே தீபாவளி பண்டிகை காலத்தில் உருவாகும் வர்த்தகத்தை நம்பி தான் உள்ளது.
இந்திய அரசின் இலக்கு
4வது இந்திய எனர்ஜி மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் பேசுகையில், இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டின் உள்கட்டமைப்பு, பின்டெக், வேலைவாய்ப்பு உருவாக்குதல், நிலையான சொத்துக்களை உருவாக்கும் தொழிற்துறைகள் மீது அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி
2021-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டை விடவும் 2வது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்தால் 3வது மற்றும் 4வது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் முக்கியமான இடத்தை அடையும்.
3 மற்றும் 4வது வளர்ச்சி கணிப்புகள் அடிப்படையில் 2020-21 நிதியாண்டின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி negative(-) அல்லது ஜீரோ அளவில் தான் இருக்கும் என ர்மலா சீதாராமன் கூறினார்.
கார்பரேட் வரி
உலகளவில் இந்தியாவில் தான் குறைந்த அளவிலான கார்பரேட் வரி வசூலிக்கப்படுகிறது. இந்திய உற்பத்தித் துறையில் எந்த முதலீடு வந்தாலும், உற்பத்தி பணிகளை மார்ச் 2023-க்குள் துவங்கப்பட்டால் 15 சதவீத கார்பரேட் வரி மட்டுமே வசூலிக்கப்படும்.
இதனால் இந்தியாவில் அளவிலான உற்பத்தி நிறுவனங்கள் வர வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா
மேலும் அவர் இந்தியா மீண்டும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற இடத்தை விரைவில் அடையும் என்று கூறினார்.
ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 23.9 சதவீதம் வரையில் சரிந்து உலகிலேயே மிகவும் மோசமான சரிவைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications