கோடிக்கான இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் கொட்டி கிடப்பதாகவும் அந்த பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
சட்டத்துக்குப் புறம்பாக சுவிஸ் வங்கியில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஏராளமாக டெபாசிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகம், மத்திய அரசுக்கு இந்தியர்களின் கணக்கு குறித்த விவரங்களை தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கி
சுவிஸ் வங்கியில் இந்திய தனிநபர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான கணக்குகள் இருப்பதாகவும் அந்த தகவல்களை இந்திய அரசுடன் பரிமாற்றம் செய்ய சில ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
தகவல் பரிமாற்றம்
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சுவிஸ் பெடரல் வங்கி இந்தியா உள்பட 101 நாடுகளில் உள்ளவர்கள் வைத்திருக்கும் கணக்குகள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4வது பட்டியல்
இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவுக்கு சுவிஸ் பெடரல் வங்கி இந்தியர்களின் கணக்குகள் குறித்த 3 பட்டியல்களை அனுப்பியுள்ள நிலையில் தற்போது 4வது பட்டியலை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியர்களின் பணம்
இந்த 4வது பட்டியலில் இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் கணக்கு வைத்திருக்கும் தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் குடியிருக்கும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அதிகம் கணக்கு வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கு
சுவிஸ் வங்கி தந்துள்ள இந்த தகவல்களில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர், முகவரி, வசிக்கும் நாடு, மற்றும் வரி அடையாள எண் விவரங்கள் இருப்பதாகவும் இந்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸ் வங்கியில் கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர இந்த பட்டியல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கை
சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள வைப்பு நிதி முதலீடுகள், டெபாசிட்கள் ஆகியவை குறித்து முழு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்தியாவின் சட்ட அமைப்பிற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே சுவிஸ் வங்கியில் முறைகேடான வகையில் பணம் டெபாசிட் செய்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications