உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் பலவும் தங்களுடைய ஆண்டு பட்ஜெட்டில் கணிசமான தொகையை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்கின்றன. அண்டை நாடுகளுடனான மோதல்கள், சர்வதேச அளவில் தங்களின் மதிப்பை நிலைநாட்டுவது என பல காரணங்களுக்காக உலக நாடுகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கிலான பணத்தை ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்கின்றன.
ஆயுதங்கள் வாங்குவது, உற்பத்தி செய்வது, ராணுவத்தை மேம்படுத்துவது என பலவற்றுக்காக இந்த பணம் செலவு செய்யப்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் ராணுவத்திற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் பத்து நாடுகள் குறித்த விவரங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே மோதல்கள் நீடித்த வண்ணம் இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல்கள், ஈரான் இஸ்ரேல் மோதல், மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் மோதல்கள் என அடுக்கி கொண்டே போகலாம். இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்களுடைய பலத்தை நிரூபிப்பதற்காக ராணுவத்தை வலுப்படுத்திய வண்ணம் இருக்கின்றன.
சீனா, அமெரிக்கா , இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் வலிமைக்கு சான்றாக ராணுவ பலத்தை வைத்திருக்க அதிக தொகையை ஒதுக்குகின்றன. எனவே தான் இவை ராணுவத்திற்கு அதிகபட்ச நிதியை ஒதுக்கீடு செய்கின்றன. ஸ்வீடனை சேர்ந்த ஸ்டாக் ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் என்ற சிப்ரி எனப்படும் அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை வெளியிடும்.
அந்த வகையில் 1998 ஆம் ஆண்டில் உலக நாடுகள் பாதுகாப்பு துறைக்காக செய்த ஒதுக்கீடு அளவு 1600 பில்லியன் டாலர்கள். அது 2024 ஆம் ஆண்டில் 2600 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கா பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் தான் பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்ச நிதியை ஒதுக்கீடு செய்கின்றன. உலக மொத்த ஜிடிபி- யில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியின் மதிப்பு 2.5 சதவீதமாக இருக்கிறது.
உலக அளவில் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். அமெரிக்கா தான் உலகிலேயே அதிகபட்சமாக ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் நாடாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா 997 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்திருக்கிறது. சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது . 2024 ஆம் ஆண்டில் இந்த நாடு 314 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்திருக்கிறது. அடுத்ததாக ரஷ்யா 149 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்திருக்கிறது.

இந்த பட்டியலில் ஜெர்மனி நான்காவது இடத்தில் இருக்கிறது அந்த நாடு 88.5 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா 86.1 மில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா தன்னுடைய ஜிடிபி- யில் 2.3 சதவீதம் தொகையை ராணுவத்திற்காகவே ஒதுக்கீடு செய்திருப்பதாக சிப்ரி அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல் குறிப்பிடுகிறது.
மொத்தமாக முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள் 1635 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்திற்காக மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளன. ஒட்டுமொத்த உலக பாதுகாப்பு துறை ஒதுக்கீட்டில் இந்த ஐந்து நாடுகளே 60% பங்களிப்பை கொண்டு இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை உலக அளவில் ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியா 2024 ஆம் ஆண்டில் 1.6% கூடுதலாக ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அது தவிர உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் இருந்து அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறது.
2024ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவாக ஐரோப்பிய நாடுகள் ராணுவ நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளன. இதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல்கள் முக்கிய காரணமாகும். இந்தியாவுக்கு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா ஆகியவை எல்லையில் எப்போதுமே பிரச்சினை கொடுத்து வருகின்றன. எனவே இந்தியா கட்டாயம் தன்னுடைய ராணுவத்தை வலுவாக வைத்திருக்க வேண்டிய சூழலில் உள்ளது.
கடந்த வாரம் கூட காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கண்காணிப்பை மேம்படுத்தவும் அரசு அதிக தொகையை செலவு செய்கிறது.
2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை இந்தியா பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிக தொகையை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்தியா பாதுகாப்புத்துறைக்கு 86.1 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அரசு தங்களுடைய பாதுகாப்பு துறைக்காக 10.2 பில்லியன் டாலர்களை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. அந்த வகையில் இந்தியா பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிகமாக பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது.
மற்றொரு அண்டை நாடான சீனாவும் எல்லையில் இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்ட வண்ணம் தான் இருக்கிறது. ஆனால் சீனா இந்தியாவை விட பல மடங்கு பாதுகாப்பு துறைக்கு ஒதுக்குகிறது. சீனா இந்தியா மட்டுமல்ல தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடனும் மோதல் போக்கில் தான் இருக்கிறது. இது தவிர இந்தியாவை சுற்றி இருக்கும் நாடுகளை வளைத்து போட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே தென் சீன கடல் பகுதியிலும் தீவுகள் தொடர்பான பிரச்சினையில் இருக்கிறது. இதனால் அந்த நாடு எப்போதுமே பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை தான் ஒதுக்கும்.
சீனாவை பொறுத்தவரை 314 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7 சதவீதம் உயர்வு. ஆசிய நாடுகளிலேயே பாதுகாப்பு துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடாக சீனா இருக்கிறது.எனவே சீனாவுடன் மோத வேண்டும் என்றால் இந்தியா அதற்கேற்ற வகையில் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டும். இதற்காக தான் அரசு பாதுகாப்பு துறைக்கு அதிக கவனம் செலுத்தி நிதி ஒதுக்குகிறது. ராணுவத்திற்காக பெரும்பாலான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த இந்திய தற்போது உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்யும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
More From GoodReturns

துரந்தர் படத்தின் வசூலில் பங்கு கேட்கும் பாகிஸ்தான் மக்கள்!! இதென்ன புது பிரச்சினை!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications