கூகுள் தனது வருடாந்திர நிகழ்வான "கூகுள் ஃபார் இந்தியா" என்ற நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் குறித்து தெரிவித்துள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம், கூகுள் மேப், சைபர் செக்யூரிட்டி போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த நிகழ்ச்சியில் வெளியானது. அதில் மிக முக்கிய அறிவிப்பு கூகுள் பே தொடர்பான அறிவிப்பு. அது என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
ஜெமினி விரிவாக்கம்: அனைத்து உள்ளூர் மொழிகளை ஆதரிக்கும் வகையில் ஜெமினி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மாடலில் ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. 40% இந்திய பயனர்கள் வாய்ஸ் மூலம் ஜெமினியை தொடர்பு கொள்கின்றனர். மேலும் 8 இந்திய மொழிகளை விரைவில் புகுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. தற்போது ஹிந்தி, பெங்காளி, தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் ஜெமினி உடன் தொடர்பு கொள்ள முடியும்.

கூகுள் மேப்ஸ்: கூகுள் மேப்ஸ் ரியல் டைம் அப்டேட்களை செய்து வருகிறது. வெள்ளம் மற்றும் மூடுபனி போன்றவற்றை ட்ராக் செய்து அறிக்கைகளாக வெளியிடும் புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. சவாலான காலநிலையில் பயனர்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதுப்பிப்புகள் செய்யப்பட உள்ளன.
கூகுள் பே: தற்போது இந்தியாவில் 35 மில்லியன் பயனர்கள் கூகுள் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். யூபிஐ சர்க்கிள் என்ற புதிய அம்சத்தையும் கூகுள் பே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இன்னொருவருடைய அக்கவுண்ட்டை கையாள முடியும். அதோடு மட்டுமின்றி கூகுள் பே கடன் வரம்புகளை 5 லட்சமாக விரிவுபடுத்தி உள்ளது. மேலும் 50 லட்சம் வரையிலான தங்க கடன்களுக்கு கூகுள் பே செயலியில் விண்ணப்பிக்கும் வசதியை கொண்டு வர உள்ளது.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஹெல்த் கேர் டூல்: கூகுள் நிறுவனம் இந்திய மருத்துவமனைகளுக்கு AI மூலம் இயங்கும் TB மற்றும் புற்றுநோய் பரிசோதனை கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவி விரைவில் இலவசமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது இந்திய சுகாதார அமைப்பின் மேம்பாட்டிற்கு பெரிய பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 50 லட்சம் வரையிலான தங்க கடன்களை கூகுள் பே வழங்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான செயல்முறை மற்றும் பிற விவரங்கள் குறித்த செய்திகள் இனி வரும் நாட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications