மத்திய அரசு நம் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. இருப்பினும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் மட்டும் சுமூகமான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாமல் இந்தியா திணறி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆட்டோமொபைல் வரிகள்தான்.
உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு மத்திய அரசு அதிக வரி விதிக்கிறது. இதனை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதுவரை அசைந்து கொடுக்கவில்லை.

குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தத்தை எதிர்கொண்ட போதிலும், முழுமையாக தயாரிக்கப்பட்ட கார்களுக்கு தற்போது இறக்குமதியாக வரி விதிக்கப்படும் 100 சதவீதத்தில் எந்த வரி குறைப்பையும் வழங்குவதற்கு எதிரான தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
இதனால் அந்த 3 பொருளாதார அமைப்புகளுடனும் சுமூகமான வர்ததக ஒப்பந்தம் மேற்கொள்வது இன்னும் இழுபறியாகவே இருந்து வருகிறது. இருப்பினும் தற்போது இந்திய அரசாங்கம் உடனடியாக இரண்டு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கியுள்ளது. முதலாவது, அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது, அடுத்ததாக சில பொருட்களுக்கு அமெரிக்காவின் 26 சதவீத வரியிலிருந்து நிவாரணம் பெறுவதும் ஆகும்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுமூகமான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், பிரீமியம் இறக்குமதி கார்கள் மீதான வரிகளை கணிசமாகக் குறைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரீமியம் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மீதான வரிகளை கணிசமாக குறைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது. இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுமூகமான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும். அமெரிக்காவுக்கு ஒருதலைப்பட்ச சலுகைகளை வழங்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கும் அதேவேளையில், , நிலையான வருடாந்திர ஒதுக்கீட்டோடு, ரூ.40 லட்சத்துக்கு மேல் விலையுள்ள உயர் ரக வாகனங்களுக்கான வரிகளில் கணிசமான குறைப்பது குறித்து மத்திய அரசு துறைகளுக்குள் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
உயர் ரக கார்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து அந்த 3 பொருளாதார அமைப்புகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்து விடுவோம் எண்ணத்தில் மத்திய அரசு காய்களை நகர்த்த தொடங்கியுள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications