ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..!

வோடபோன் குழுமம் இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றி கண்டுள்ளது.

இதற்கிடையில் தற்போது இதனை எதிர்த்து, இந்திய அரசு சிங்கப்பூர் நீதிமன்றத்தினை நாட உள்ளதாக, இதனையறிந்த அரசு அதிகாரிகள் கூறியதாக பிசினஸ் டுடே வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசாங்கத்திற்கு எதிராக ரூ.12,000 கோடி நிலுவைத் தொகையும், அதோடு ரூ.7,900 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் தெரிவித்தது. இது குறித்து வோடஃபோன் குழுமம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தினை கடந்த 2016-ம் ஆண்டிலேயே அணுகியது.

முதலீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறுகிறது

முதலீட்டு ஒப்பந்தத்தினை இந்தியா மீறுகிறது

இந்த நிலையில் வோடஃபோன் மீது இந்திய அரசு வரிச்சலுகை விதிப்பது, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான முதலீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதோடு இந்திய அரசாங்கம் வோடபோனிடம் இருந்து நிலுவைத் தொகை கோருவதை, அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

சட்ட செலவினங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்

சட்ட செலவினங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்

மேலும் இந்த நிறுவனத்தின் சட்ட செலவுகளுக்கு இழப்பீடாக இந்தியா 40 கோடி ரூபாய் இழப்பீடாக செலுத்த வேண்டும். அதோடு வோடபோனில் இருந்து வசூலிக்கப்பட்ட 44.74 கோடி ரூபாய் நிதியினை திரும்ப செலுத்த வேண்டும். ஆக மொத்தத்தில் வோடபோன் நிறுவனத்திற்கு 85 கோடி ரூபாய் நிதியினை திரும்ப இந்திய செலுத்த வேண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வோடபோன் செலுத்த வேண்டும்

வோடபோன் செலுத்த வேண்டும்

ஆனால் இந்த வழக்கில் கூறப்படும் 12,000 கோடி ரூபாய் நிலுவையும், 7,900 கோடி ரூபாய் அபராதமும் இந்திய நிறுவனமான Hutchison Whampoaவிடம் இருந்து, கடந்த 2007ல் கையகப்படுத்தியதில் இருந்து உருவாகியது என்றும் கூறப்படுகிறது. அரசு தரப்பில் இந்த நிறுவனத்தினை கையகப்படுத்திய வோடபோன் தான் இதனை செலுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு

அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது நொடிந்து போன வோடபோன் நிறுவனத்திற்கு சற்று ஆறுதலைக் கொடுக்கும். ஏனெனில் ஏற்கனவே பலத்த போட்டியின் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த இந்த நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் நஷ்டத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் தான் ஏஜஆர் வழக்கும் வந்தது. இதன் காரணமாக ஏற்கனவே கடன் பிரச்சனையில் இருந்த நிறுவனத்திற்கு இன்னும் அழுத்தத்தினை கொடுத்தது. இந்த நிலையில் அரசு சமீப வாரங்களுக்கு முன்பு தான் 10 ஆண்டுகள் அனுமதி கொடுத்தது. இதற்கிடையில் தற்போது இந்த வழக்கிலும் வெற்றி பெற்றுள்ளது வோடபோன் நிறுவனத்திற்கு நல்ல விஷயம் தான்.

ஆனால் இதனால் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+