இந்திய மக்களின் முக்கிய உணவு பொருளான கோதுமை விலை தாறுமாறாக உயர்ந்து பல வருட உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் கோதுமை விலை உயர பல காரணங்கள் இருந்தாலும், உலகளவில் கோதுமைக்கு அதிகளவிலான தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை உருவாக மிக முக்கியமான காரணம் ரஷ்யா - உக்ரைன் போர் தான்.
இந்நிலையில் ஒன்றிய அரசு கோதுமை விலையை குறைக்க முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கோதுமை விலை
இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தினசரி பயன்படுத்தும் உணவு பொருளாக இருக்கும் கோதுமை விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் அதிகப்படியான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைச் சரி செய்யும் விதமாக ஒன்றிய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஓன்றிய அரசு
ஓன்றிய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தடை செய்யப்பட்ட பட்டியலில் கோதுமையைச் சேர்த்து உள்ளதாகவும், இந்தத் தடை மூலம் இந்திய மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அண்டை நாடுகளுக்கும், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் உதவி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.
அரசு கட்டுப்பாடு
மேலும் பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலும், தத்தம் அரசின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று ஓன்றிய அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதன் மூலம் மொத்த கோதுமை ஏற்றுமதி அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து, சர்வதேச சந்தை தானியங்களின் விலை கிட்டத்தட்ட 40% ஏற்றம் கண்டதைத் தொடர்ந்து, தற்போது கோதுமை மற்றும் கோதுமை மாவின் ஏற்றுமதியை இந்தியா அரசு முடுக்கியுள்ளது.
கோதுமை உற்பத்தி
இந்த ஆண்டுக் கோதுமை உற்பத்தியானது 95 மில்லியன் டன்களாக (mt) இருக்கும் என வர்த்தகர்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அரசு மதிப்பீடுகளின்படி 105 மில்லியன் டன்கள். கணிப்புக்கும் உற்பத்திக்கும் மத்தியிலான சரிவும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications