வரும் நவம்பர் மாதத்திற்குள் பெட்ரோலில் 5 சதவீதம் எத்தனால் கலப்பு இருக்க வேண்டும் என இந்தியா இலக்கு வைத்து இருந்த நிலையில் தற்போது திட்டமிட்டதை விட ஐந்து மாதங்களுக்கு முன்பே இலக்கை எட்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா எரிசக்தித் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
குறிப்பாக பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கும் இலக்கை ஐந்து மாதங்களுக்கு முன்பே அடைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெட்ரோலில் எத்தனால்
கடந்த 2014ஆம் ஆண்டு பெட்ரோலில் எத்தனால் கலப்படம் 2 சதவீதமாக இருந்த நிலையில் அது 10 சதவீதமாக 2022ஆம் ஆண்டுக்குள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் கார்பன் வெளியேற்றம் 27 லட்சம் டன் குறைக்கப்பட்டது என்பதும் இதன் காரணமாக அன்னிய செலவாணி கையிருப்பு 40 ஆயிரம் கோடியாக சேமிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்கு
2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20% என இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதில் 2022ஆம் ஆண்டுக்குள் 10% சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைய வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஐந்து மாதங்களுக்கு முன்பே அதாவது ஜூன் மாதத்திலேயே இந்தியா அதன் இலக்கை எட்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2025ன் இலக்கு
அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்குள் 20% பெட்ரோலில் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கையும் முன்கூட்டியே இந்தியா அடைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்பது சாத்தியமானது என்றும் அதனால் 2022ஆம் ஆண்டு நவம்பர் என்ற இலக்கைவிட மிகவும் முன்னதாகவே இலக்கு எட்டப்பட்டுள்ளது பெருமைக்குரியது என்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நிய செலவாணி
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமின்றி 40 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நிய செலவாணியும் சேமிக்கப்பட்டுள்ளது என்றும், இது இந்தியாவின் சாதனை என்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கார்பன் உமிழ்வு
அதேபோல் கார்பன் உமிழ்வு 27 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது என்பதும் இதனால் 40 ஆயிரத்து 600 கோடிக்கு மேல் மிச்சமான பணத்தை வைத்து விவசாயிகளுக்கு தேவையானதை செய்ய வழிவகுத்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம்
10 சதவீதம் எத்தனால் கலப்பு என்பதை முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா, 20 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கையும் 2025-26க்குள் அடைய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications