அமெரிக்கா சீனா பதற்றம்.. இந்தியாவுக்கு இது நல்ல வாய்ப்பு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா சீனா இடையேயான உறவுகள் நாளுக்கு நாள் விரிசல் அடைந்து வரும் நிலையில், இந்த பிரச்சனை இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

 

அமெரிக்கா தனது நாட்டிலுள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலுள்ள சீன தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டிருந்தது.

சீனா பதிலடி

சீனா பதிலடி

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா ஹேக் செய்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ முன்னதாக ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

உறவுகள் மோசமடைந்து வருகிறது

உறவுகள் மோசமடைந்து வருகிறது

இது மட்டும் அல்ல, பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அமெரிக்கா - சீனா இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ் பரவல், ஹாங்காங் விவகாரம் உள்ளிட்ட பல தரப்பட்ட பிரச்சனைகளில். சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு எண்ணற்ற தொடர் குற்றச்சாட்டுகளை சாட்டி வருகிறது.

கொரோனா தடுப்பூசி இலக்கா?
 

கொரோனா தடுப்பூசி இலக்கா?

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஹேக்கர்கள் கோவிட் 19 தடுப்பூசிகளை தயாரித்து வரும் ஆய்வகங்களை இலக்கு வைத்திருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறை குற்றம்சாட்டியது மேலும் அமெரிக்காவில் இருக்கும் மேலும் பல சீனத் தூதரகங்களை எப்போது வேண்டுமானாலும் மூட சொல்ல முடியும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் அப்போது தெரிவித்து இருந்தார்.

இது ஒரு அரசியல் நகர்வு

இது ஒரு அரசியல் நகர்வு

இந்த நிலையில் இதற்கு தனது கருத்தினை தெரிவித்த சீனா, ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை வெள்ளிக்கிழமைக்குள் மூட அந்த நாடு உத்தரவிட்டுள்ளதை ஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு என தெரிவித்துள்ளது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த நிலையை சீனா ஒருபோதும் விரும்பவில்லை. இவை அனைத்திற்கும் அமெரிக்காவே பொறுப்பு என்றும் சீனா தெரிவித்துள்ளது.

வர்த்தக ரீதியாக நல்ல வாய்ப்பு தான்

வர்த்தக ரீதியாக நல்ல வாய்ப்பு தான்

இதற்கிடையில் சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை வரும் திங்கட்கிழமைக்குள் மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படி இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி வளர்ந்து வரும் பிரச்சனை கவலையளிக்கும் விதமாகவே இருந்தாலும், வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு சில வாய்ப்புகளை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீன சட்டத்திற்கு போர்க்கொடி

சீன சட்டத்திற்கு போர்க்கொடி

இது குறித்து நகை ஏற்றுமதி கவுன்சில் மூத்த அதிகாரி ஒருவர், ஜெம் அன்ட் ஜூவல்லரி ஏற்றுமதி நல்ல பிரகாசமான எதிர்காலத்தினை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தினை சீனா விதித்த நிலையில், இந்த சட்டமானது உள்நாட்டிலேயே பலரும் இதற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.

வரி விகிதத்தினை அதிகரிக்கப் போவதாக மிரட்டல்

வரி விகிதத்தினை அதிகரிக்கப் போவதாக மிரட்டல்

இதற்காக தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமான அமெரிக்கா, சீனா பொருட்களின் மீதான வரியினை 3.3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்துவதற்காக எச்சரிக்கையினை விடுத்துள்ளது. ஆக அமெரிக்காவின் இந்த அதிரடியான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கும் என்றும் நான் நினைக்கிறேன் என்று GJEPC -ன் தலைவர் கொலின் ஷா பிடிஐயிடம் தெரிவித்துள்ளாதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறியுள்ளது.

நகை ஏற்றுமதியில் சீனாவும் முக்கிய பங்கு

நகை ஏற்றுமதியில் சீனாவும் முக்கிய பங்கு

அமெரிக்காவை பொறுத்தவரையில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதியில் சீனா நான்காவது இடத்தில் உள்ளது. ஹாங்காங் மற்றும் சீனா ஆகியவை முறையே, கடந்த 2019ம் ஆண்டில் 980.85 மில்லியன் அமெரிக்கா டாலர் மற்றும் 2622.19 மில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினம் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள்

இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள்

ஆக அமெரிக்கா சீனா பிரச்சனையால், இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வழிகள் உள்ளது. அதோடு உற்பத்தி வணிகமானது சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாறுவதையும் காணலாம் என்றும் ஷா கூறியுள்ளார். GJEPC அறிக்கையின் படி, இந்தியா கடந்த 2018 - 2019ல் 10.48 பில்லியன் டாலர் மதிப்பிலான ரத்தினங்கள் மற்றும் நகை ஏற்றுமதி செய்துள்ளது. இதே 2019 - 2020ல் 9.17 பில்லியன் டாலர் மதிப்பிலான நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு நகை ஏற்றுமதியில் 26% ஆகும். எப்படியோங்க இந்தியாவுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India has bright future for gems and jewelry trade amid US –china issue

US – china trade issue.. India has bright future for gems and jewellery trade amid US –china issue
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X