ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னணி இந்தியா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. The Asia Power Index Report 2024 (ஏசியா பவர் இன்டெக்ஸ் ரிப்போர்ட் 2024) என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவை லோவி (Lowy Institute) என்ற நிறுவனம் புவிசார் அரசியலை சமாளிக்கும் திறனை வைத்து ஒரு பட்டியலை தயாரித்துள்ளது.
ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகள் என்ற தலைப்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகளின் குறிப்பிட்ட 8 அம்சங்களை அளவீடாகக் கொண்டுதான் இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

ராணுவத் திறன், பாதுகாப்பு நெட்வொர்க், பொருளாதாரம், ராஜதந்திர மற்றும் கலாச்சார ரீதியிலான செல்வாக்கு மற்றும் எதிர்கால வளங்கள், ஒரு பின்னடைவிலிருந்து மீண்டு வருவது ஆகியவற்றைக் கொண்டு இது கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சீனா இருக்கிறது. இதற்கு முன்பு இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் ஆறாவது இடத்தில் ரஷ்யாவும் இருக்கின்றன. தென் கொரியா ஏழாவது இடத்திலும் சிங்கப்பூர் எட்டாவது இடத்திலும் இந்தோனேசியா ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது.
ஜப்பானை பொருத்தவரை அங்கே வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இந்தியாவில் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக இந்தியாவில் வேலை பார்ப்பதற்கான வயது தகுதி பெற்ற நபர்கள் அதிகமாக இருப்பார்கள் என தெரிவிக்கிறது. அது மட்டும் இன்றி தூதரகரீதியிலும் பிராந்திய பாதுகாப்பிலும் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
குவாட் போன்ற அமைப்புகளில் இந்தியா இடம் பெற்றிருப்பது இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பிராந்திய பேச்சு வார்த்தைகளில் இந்தியா தலைமை பண்பு கொண்டிருப்பது காரணமாக பிராந்திய ரீதியாக வலிமையான நாடாக இந்தியா உருவாகி இருக்கிறது என இந்த அறிக்கை கூறுகிறது.
அண்டை நாடுகளுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியாவின் விரிவடைந்து வரும் புவிசார் அரசியல் நோக்கங்களை எடுத்துக்காட்டுகிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இந்தியா தன்னுடைய முழு செயல்திறனை இன்னும் எட்டவில்லை என்றும் சக்தி வாய்ந்த நாடாக முன்னேறி செல்வதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவிற்கு இருக்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
கொரோனாவுக்கு பின்னர் இந்திய பொருளாதார மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதாரமாக மீண்டு வந்திருக்கிறது எனவேதான் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications