கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை அடுத்து சீனா மற்றும் இந்தியா இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் விழுந்தது.
இந்தியா சீனா உடனான உறவுகளை துண்டித்தது. சீனாவுக்கு நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக மத்திய அரசு சீனர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்தியது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக சீனர்களுக்கு இந்தியாவில் சுற்றுலா விசா வழங்கப்படுவது கிடையாது. ஆனால் அண்மைக்காலமாக மீண்டும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த ஆண்டு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்பொழுது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்று வருகிறது . அமெரிக்காவின் வர்த்தக மோதலுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் நெருங்கி வர தொடங்கி இருக்கின்றன . இதன் ஒரு பகுதியாக மீண்டும் சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு அனுமதி தந்திருக்கிறது .
இந்தியா -சீனா இடையே ஏற்பட்டிருக்க கூடிய உறவை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுலா விசா வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஏற்கனவே சீன நாட்டில் உள்ள தூதரகங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது உலகம் முழுவதும் வசிக்கும் சீனர்கள் இந்த சேவையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது .
முதலில் சீனாவில் உள்ள பெய்ஜிங், ஷாங்காய், குவான்சோ ஆகிய நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் மட்டுமே சீனர்கள் இந்திய சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என விதி கொண்டு வரப்பட்டது. தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளில் இருக்கும் சீனர்களும் தங்களுக்கு அருகே உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் சுற்றுலா விசா பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த அக்டோபரில் தான் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டன. அமெரிக்கா அரசு இந்தியாவுடன் வர்த்தக மோதலை கடைபிடித்து வருகிறது. குறிப்பாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதித்திருக்கிறது . இதனால் இந்தியா அதிருப்தியில் இருந்தது. ஆனால் இதுதான் பிரிந்திருந்த சீனாவையும் இந்தியாவையும் நெருங்கி வர செய்திருக்கிறது.
இந்தியா- சீனா இடையிலான உறவு புதுப்பிக்கப்பட்ட நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது தன்னுடைய கடுமையான போக்கை மாற்றி கொண்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகளும் , டிரம்பும் இந்தியாவை விமர்சிப்பத்தை அண்மை காலமாக குறைத்துள்ளனர்.
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications