இந்தியாவின் ஜிடிபி $4 டிரில்லியன்.. டிவிட்டரில் டிரெண்டாகும் போட்டோ.. அட இவர் கூட டிவீட் போட்டு இருக்காரே

டிவிட்டரில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஏதாவது ஒரு போட்டோ டிரெண்டாவது வழக்கமாக இருந்தாலும், பெரும் தலைவர்கள், தொழிலதிபர்கள் என மக்கள் மத்தியில் அதிகச் செல்வாக்கு கொண்ட மக்கள் ஒரே போட்டோ-வை தொடர்ந்து டிவீட் செய்யும் போது மக்கள் மத்தியில் அது வைரலாகும்.

அப்படி எக்ஸ் எனப் பெயர் மாற்றப்பட்டாலும் தொடர்ந்து டிவிட்டர் என்றே அழைக்கப்பட்டு வரும் மைக்ரோ பிளாகிங் தளத்தில் ஒரு போட்டோ-வில் இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியுள்ளது என ஒரு போட்டோ ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை போட்டிக்கு மத்தியில் டிவிட்டரில் டிரெண்டானது.

இந்தியாவின் ஜிடிபி $4 டிரில்லியன்.. டிவிட்டரில் டிரெண்டாகும் போட்டோ..!!

பொதுவாக இந்தியாவின் ஜிடிபி தரவுகளை மத்திய அரசு வெளியிடும் அல்லது சர்வதேச பொருளாதார அமைப்புகள் தனது சொந்த ஆய்வுகளின் படி கணிப்பை வெளியிடும். இதனை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகளும், சந்தை விரிவாக்கமும் நடக்கும். ஆனால் யார் வெளியிட்ட தரவுகள் எனத் தெரியாமல் பகிரப்பட்ட ஒரு போட்டோ மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல் பலரும் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் புகைப்படத்தில் சுமார் 190 நாடுகளின் ஜிடிபி தரவுகளின் லைப் டேட்டா ஸ்கிரீன்ஷாட் செய்யப்பட்டுப் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தின் படி இந்தியா 5வது இடத்தில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் உள்ளது. இந்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தைத் தான் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது X பதிவில் ஆற்றல்மிக்க, தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவம் இப்படித்தான் இருக்கும், அது தான் நம் புதிய இந்தியா அழகாக முன்னேறி வருகிறது! நமது தேசம் $4 டிரில்லியன் ஜிடிபி மைல்கல்லைத் தாண்டியதற்கு எனது சக இந்தியர்களுக்கு வாழ்த்துகள்! மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி-க்கு அதிகச் சக்தி, அதிக மரியாதை உங்களுக்குக் கிடைக்கும் எனவும், #பொருளாதாரம் #இந்தியா ஆகிய இரு ஹேஷ்டேக் உடனும் டிவிட்டர் செய்துள்ளார்.

தேவேந்திர ஃபட்னாவிஸ் பதிவு இன்னும் டெலிட் செய்யாத நிலையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் கோடீஸ்வரர் கௌதம் அதானி ஆகியோர் பதிவிட்ட பின்பு இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதாலும், டிவிட்டர்வாசிகள் இந்தப் பதிவுக்குக் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் டெலிட் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் இதற்காக ஆதாரத்தைக் கூகுள் உதவியுடன் செக் செய்த போது LiveStream07 என்ற யூடியூப் தளம் இந்த டேட்டாவை லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளது. இந்த யூடியூப் சேனலுக்கு வெறும் 3000 பேர் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இது யூடியூப் சேனலில் இருக்கும் தரவுகள் தவறாக இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, எனவே இதை வைத்து இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டியுள்ளது எனக் கூற முடியாது. இந்தியாவில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில் இத்தகைய பதிவு மக்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+