இந்தியர்கள் கொத்தடிமைகளா? அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுக்கு தக்க பதிலடி தந்த மத்திய அரசு..!!

அமெரிக்க அரசு ஹெச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் , மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கிரீன் கார்டுகளுக்கான PERM விண்ணப்பங்களை மேற்கொள்ள தற்காலிக தடை விதித்துள்ளது டிரம்ப் நிர்வாகம்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் , வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து வேலை செய்பவர்களை கொத்தடிமைகள் என அர்த்தம் கொள்ளும் வார்த்தைகளை பயன்படுத்தினார். இது இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்களை கொதிப்படைய செய்துள்ளது. இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் கொத்தடிமைகளா? அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுக்கு தக்க பதிலடி தந்த மத்திய அரசு..!!

அமெரிக்காவில் ஹெச்1பி விசா வைத்துள்ள வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்களுக்கு நிரந்தர வசிப்பிட உரிமையான கிரீன் கார்டு வழங்குவதற்காக நிறுவனங்கள் PERM விண்ணப்பம் தாக்கல் செய்யும். இந்நிலையில் விசாவில் நடக்கும் முறைகேடுகளை விசாரிப்பதாக கூறி மைக்ரோசாப்ட், அடோப், இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் , காக்னிசென்ட் மற்றும் கேப்ஜெமினி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இந்த விண்ணப்பங்களை மேற்கொள்ள டிரம்ப் அரசு தடை விதித்துள்ளது.

Also Read

இந்த அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்களை உள்ளூர் அமெரிக்க தொழிலாளர்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் கொத்தடிமைகள் என விமர்சித்து கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் , வான்ஸின் சொற்கள், அமெரிக்க டெக் துறை வளர்ச்சியில் இந்திய தொழில் வல்லுநர்களின் பங்களிப்பை முற்றிலுமாக புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்திற்கும் அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் வழங்கி வரும் அபரிமிதமான பொருளாதார மதிப்பையும், திறமையையும் இந்த வார்த்தைகள் கொச்சைப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஹெச்1பி விசா விண்ணப்பமும் , பெர்ம் விண்ணப்பமும் ஒன்று அல்ல என்றும் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையால் ஹெச்1பி விசா வைத்து வேலை செய்பவர்களுக்கோ விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கோ எந்த சிக்கலும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

அமெரிக்க டெக் துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு முக்கியமானது என்பதையும் மத்திய அரசின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.ஏற்கனவே விசா கட்டுப்பாடுகளால் இந்திய டெக் நிறுவனங்கள் ஹெச்1ப் விசா விண்ணப்பங்களையே குறைய்த்து விட்டன. இந்த பெர்ம் விண்ணப்ப தடை தங்கள் செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விளக்கம் தந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+