சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநராக இருக்கும் இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 15 சதவீதமாக உள்ளது என கணக்கிட்டு கூறியுள்ளார்.
அமெரிக்கா, சீனாவின் ஜிடிபி வளர்ச்சி இமயம் போல் உயர்ந்திருக்கும் வேளையில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எப்படி சீனாவுக்கு ஈடுக்கொடுக்க முடியும் என்ற கேள்வி நீண்ட காலமாக உயர்ந்திருக்கும் வேளையில் கீதா கோபிநாத்-ன் பேச்சு பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

ஐஎம்எப் துணை தலைவர் கீதா கோபிநாத் முன்னணி பத்திரிக்கைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், 2027-28க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் கூறினார். இதோடு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 15 சதவீதமாக உள்ளது என கணக்கிட்டு கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவை உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரம் இன்ஜின் என குறிப்பிட்டு உள்ளார் கீதா கோபிநாத், ஆனால் இந்திய பொருளாதாரம் உயரிய இடத்தை அடைவதற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்றும் தெளிவாக கூறினார் கீதா கோபிநாத்.
இந்தியா தனது உச்சக்கட்ட பொருளாதார நிலையை அடைய அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளுக்கு தற்போது உள்ள உயரிய வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வது அவசியம் என்று தெரிவித்தார். இதற்கு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் கட்டாயம் தேவைப்படும் என்றும் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
இந்தியா ஒரு பெரிய நாடு என்பதால் தனிநபர் வருமானம் அடிப்படையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும் கூட சிறிய அளவிலேயே இருக்கும். இதனால் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை இன்னும் அதிகமாக உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என பொருளாதார நிபுணரும், ஐஎம்எப் துணை தலைவர் கீதா கோபிநாத் கூறினார்.
இதோடு இந்தியாவின் நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் கீதா கோபிநாத் கூறினார். பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி, வளர்ச்சியைத் தூண்டும் இரண்டு காரணிகள் பொது முதலீடு மற்றும் நெகிழ்ச்சியான நுகர்வு செலவு.
ஆனால் இந்த அடிப்படையான இரு விஷயங்களை சரி செய்வதில் பல சவால்கள் உள்ளது. மேலும் கீதா கோபிநாத் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே அதிக அளவில் அன்னிய நேரடி முதலீட்டைப் பெறுகின்றன, பிற மாநிலங்கள் அதிகப்படியான முயற்சிகளை செய்ய வேண்டியது கட்டாயம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications