இந்திய வேலைவாய்ப்பு சந்தைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ரியல் எஸ்டேட் துறை மிகவும் முக்கியமானது. இப்படியிருக்கும் வேளையில் நாட்டின் முக்கிய 7 நகரங்களில் 2025ஆம் ஆண்டு வீடு விற்பனை 2024ஐ விட குறைந்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் வீடு விற்பனை குறைந்திருந்தாலும், வீடு விலை சதுர அடிக்கு சராசரியாக 8 சதவீதம் உயர்ந்துள்ளது என சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருப்பக்கம் சாமானிய மக்கள் புதிய பட்ஜெட் வீடுகளின் வருகை குறைந்துள்ளதாக புலம்பிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் புதிய வீடுகளின் விற்பனை குறைந்துள்ளது மூலம் 2026ல் வீட்டு வாடகை உயரும் அபாயமும் தற்போது உருவாகியுள்ளது.

அனராக் ரிசர்ச் அறிக்கையின்படி, 2024 இறுதியில் இந்தியாவின் டாப் 7 நகங்களில் ஒரு சதுர அடிக்கு 8,590 ரூபாயாக இருந்த விலை 2025 இறுதியில் 9,260 ரூபாயன 8 சதவீதம் உயர்ந்ததுள்ளது. இது புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. 2026இலும் விற்பனை குறைந்தால் வாடகை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
2025இல் வீடு விற்பனை சரிவு
2025இல் நாட்டின் 7 முக்கிய நகரங்களில் சுமார் 3,95,625 வீடுகள் விற்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய். 2024இல் 4,59,645 வீடுகள் 5.68 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. விற்கப்பட்ட வீடுகளின் மதிப்பு உயர்ந்தாலும் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைவு என்பது தான் பிரச்சனை.
சென்னை மட்டும் தப்பித்தது
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 2025ஆம் ஆண்டில் 1.25 சதவீதம் குறைத்தும் விற்பனை குறைந்துள்ளது அடுத்த அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். டாப் 7 நகங்களில் வீடுகளின் விற்பனை சரிந்த நிலையில் சென்னையில் மட்டும் 15 சதவீதம் உயர்ந்ததுள்ளது.
ஹைதராபாத்தில் 23 சதவீதம் குறைந்தது மோசமான சரிவை பதிவு செய்த நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. புனே, மும்பை மெட்ரோ, பெங்களூரு மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகியவையும் சரிவை கண்டன.

வீடு விலை ஏற்றம் பிரச்சனை
இந்தியாவில் வீடுகளின் விற்பனை குறைந்த போதும் வீட்டு விலை உயர்ந்ததுள்ளது. உதாரணமாக டெல்லி-என்சிஆர் 23 சதவீதம் உயர்ந்து முதலிடம் பிடித்தது. பிற நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது, சென்னையில் 4-9 சதவீதம் உயர்ந்துள்ளது.
2026இல் வீடு வாங்குபவர்களுக்கு என்ன நடக்கும்
ரிசர்வ் வங்கி 2026இல் ரெப்போ விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்புள்ள, இது வீடு கடனை மலிவாக்கும், இதனால் மக்கள் மத்தியில் புதிய வீடுகளை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். ஆனால் வீட்டு விலை குறையாது என்பதால் விற்பனை உயர்வது கடினம். 2025இல் விற்பனை குறைந்தும் விலை உயர்ந்தது போல 2026இலும் நடக்கலாம் என்பது தான் தற்போதை கணிப்பாக உள்ளது.
மறுமுனையில் ஏஐ மூலம் அனைத்து துறையிலும் பணிநீக்கம் நடந்து வரும் காரணத்தால் மக்கள் ரிஸ்க் எடுக்கு வாங்குவது குறையும்.
வாடகை உயர்வு அச்சம்
2025இல் விற்பனை குறைந்தது போல 2026இலும் தொடர்ந்தால் மக்கள் மத்தியில் வாடகை வீட்டுக்கான தேவை அதிகரிக்கும். இதனால் 7 முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை உயர வாய்ப்புள்ளது. இது நடுத்தர குடும்பங்களை கடுமையாக பாதிக்கும்.


Click it and Unblock the Notifications