இஸ்ரேல் ஈரான் பிரச்சனைக்குப் பின்பு கச்சா எண்ணெய் விலை தடுமாற்றம் அடைந்த வேளையில், உலக நாடுகள் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மூழ்கினர். இந்த நிலையில் இறக்குமதி கச்சா எண்ணெய்யை நம்பி இயங்கும் இந்தியா இக்காலகட்டத்தில் முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது.
இந்தியாவின் ஏப்ரல் மாத கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஈராக் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி அளவு குறைந்துள்ளது என்று கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கண்காணிக்கும் Kpler மற்றும் LSEG நிறுவனங்களின் டோட்டா கூறுகிறது.

2024 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு வரும் கச்சா எண்ணெய் அளவு குறைந்து வரும் வேளையில் ஏப்ரல் மாதத்தில் உயர்ந்துள்ளது. மேலும் மார்ச் மாத இறக்குமதி அளவீடுகளை ஒப்பிடுகையில் ஈராக், சவுதியிடம் இருந்து கச்சா எண்ணெய் குறைந்துள்ளது.
2022 பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது அடுத்தடுத்து தடை விகிதத்ததை தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை அதிகம் வாங்கத் தொடங்கின.
கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகளின்படி, ரஷ்யா தொடர்ந்து இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் வழங்குநராக இருந்தாலும், ஈராக் மற்றும் சவுதி அரேபியா இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் நாடான இந்தியா, கடந்த மாதங்களை விட ஏப்ரல் மாதத்தில் 13-17% அதிகமாகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.
ஈராக் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி முறையே 20-23% மற்றும் 5-8% குறைந்துள்ளது.
LSEG தரவுகளின்படி, ரஷ்யாவில் இருந்து மே மாதம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் மாதத்தின் 1.75 மில்லியன் பேரல்களில் இருந்து 1.1 மில்லியன் பேரல்களாக குறையக்கூடும் என்று கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications