சீனாவுக்கு அடுத்த செக்.. மத்திய அரசின் செம மூவ்.. கலர் டிவிகளுக்கு கடும் கட்டுப்பாடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புகைச்சலானது கல்வான் பள்ளதாக்கிற்கு பின்பு சற்று அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.

China Colour TVகளுக்கு கடும் கட்டுப்பாடு! India அதிரடி
 

எனினும் இந்தியா சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக இதனை கருதவில்லை. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் சில நாடுகளுக்கு பிரச்சனை தான் என்றாலும், அதிகம் பாதிக்கப்பட போவது சீனா தான், ஏனெனில் நம் டிவி இறக்குமதியில் பெரும்பான்மை பங்கு சீனாவுடையது தான். அதனால் தான் சீனாவுக்கு இது பெரும் பாதிப்பு என்றும் கூறப்படுகிறது.

இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு

இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் ஒரு அறிவிப்பில், கலர் டிவி இறக்குமதி செய்வதனை குறைக்கும் விதமாக மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியினை இது குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

DGFT-யிடம் அனுமதி பெற வேண்டும்

DGFT-யிடம் அனுமதி பெற வேண்டும்

இதற்கு முன்பு வரை பெரியளவில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி, கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றால், அதற்காக இறக்குமதியாளர் வர்த்தக அமைச்சகத்தின் Directorate General of Foreign Trade-யிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.

எந்தெந்த நாடுகள் இறக்குமதி
 

எந்தெந்த நாடுகள் இறக்குமதி

இந்தியாவுக்கு அதிகளவில் டிவிக்களை ஏற்றுமதி செய்யும் நாடு சீனா தான். இதனை தொடர்ந்து வியட்நாம், மலேசியா, ஹாங்காங், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் லிஸ்டில் உள்ளது. அரசின் இந்த கட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சீனாவுக்கு எதிரான நடவடிக்கை

சீனாவுக்கு எதிரான நடவடிக்கை

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 781 மில்லியன் டாலர் மதிப்புள்ள கலர் டிவிகளை இறக்குமதி செய்தது. இதில் வியட்னாமில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலும், சீனாவில் இருந்து 300 மில்லியன் டாலர் மதிப்பிலும் இறக்குமதிகள் செய்யப்பட்டிருந்ததாக தரவுகள் கூறுகின்றன. கல்வான் தாக்குதலுக்கு பிறகு பல எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India imposed restrictions on colour TV, its aim to boost up local manufacturing

India imposed restrictions on colour TV, its aim to boost up local manufacturing. It may affect china and other importing countries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X