டெல்லி: உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அதிகளவிலான இறக்குமதியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்யும் விதமாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துருப்பிடிக்காத ஸ்டீல் சீம்லெஸ் டியூப்கள் மற்றும் பைப்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு வரி விதித்துள்ளதாக ( anti-dumping duty) மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
anti-dumping duty வரி என்றால் என்ன? எதற்காக இந்த வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதிக்கும். இந்த வரியானது உள்நாட்டு முதலீட்டாளார்களை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு விதித்து வருகின்றது.
இந்தியர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவது?
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது தங்கள் பொருட்களை நியாயமான சந்தை விலைக்கு குறைவாக விற்று, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாகும். இத்தகைய இறக்குமதியாளர்களுக்கு இந்தியா விதிக்கும் வரியே கூடுதல் பாதுகாப்பு சுங்க வரி என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு
இதன் மூலம் மத்திய அரசு இறக்குமதியினை குறைத்து, ஏற்றுமதியினை அதிகரிக்க முயல்கிறது. இது உள்நாட்டு உற்பத்தியாளார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக மத்திய அரசு இத்தகைய முயற்சியினை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துருப்பிடிக்காத ஸ்டீலுக்கு இந்த வரியை , மத்திய அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எத்தனை ஆண்டுகள்?
அரசின் இந்த வரி அதிகரிப்பானது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மலிவாக இருப்பதால் பலரும் சீன இறக்குமதி பொருட்களை அதிகம் விரும்புகின்றனர். இதனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களானது தேங்கும் நிலை ஏற்படுகிறது.
எவ்வளவு வரி?
இதனால் இந்திய உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பின் படி பரிந்துரைக்கப்பட்ட வரி ஒரு டன்னுக்கு 114 டாலர் முத 3801 டாலர்கள் வரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை எதற்கு?
இதற்கிடையில் சந்தன் ஸ்டீல் லிமிடெட் மற்றும் ட்யூபாசெக்ஸ் பிரகாஷ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் வெல்ஸ்பன் ஸ்பெஷாலிட்டி உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளுக்கு இந்த குவிப்பு தடுப்பு வரி யை விதித்துள்ள நிலையில், அதனை எதிர்த்து விசாரணையை கோரியுள்ளது. இதற்கிடையில் DGTR இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சம நிலையை உருவாக்கும்
இந்த வரியானது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் ஒரு சம நிலையை உருவாக்குகிறது. இது இந்தியா சந்தையினை விரிவாக்கம் செய்ய உதவும்.
கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் இரும்புத் தாது கட்டிகள் மற்றும் 58% இரும்புக்கும் குறைவான தாது மணல்-க்கு ஏற்றுமதி வரியை மொத்தமாக நீக்கப்பட்டுப் பூஜ்ஜிய ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. இதேபோல் இரும்புத் தாது கட்டிகள் மற்றும் 58% மேல் இருக்கும் தாது மணல்-க்கு (Fines) வரி விகிதம் 30% ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
சீனாவுக்கு எதிரான நடவடிக்கையா?
மொத்தத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் என்றாலும், இது சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இது சீனா இந்தியா இடையே மேற்கொண்டு பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிக்கையானது வந்துள்ளது.


Click it and Unblock the Notifications